Leo Movie: விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் லியோ படத்தின் பல பிரச்னைகளை தாண்டி படக்குழு ஒருவழியாக நல்ல அறிவிப்பை வெளியிட்டு விட்டது. இதில் பலருக்கும் கவலை இருந்தாலும் அட இதுவாவது போதுமப்பா என்ற லெவலில் தான் சிலர் மைண்ட் வாய்ஸ் இருக்கிறதாம்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் தான் லியோ. இப்படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து மிகுந்த எதிர்ப்பு ரசிகர்களிடம் நிலவி இருந்தது. அதற்கேற்ப படத்தின் முன்வியாபாரமே மிகப்பெரிய அளவில் தான் இருந்தது. இதே நேரத்தில் ரஜினியுடனான மோதலால் மேலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவானது.
இதையும் வாசிங்க: கவுதம் மேனனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?!.. பேசாம டைரக்ஷனை விட்டு நடிகராவே மாறிடலாம்!..
தொடர்ச்சியாக படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க படத்திற்கு நிறைய பிரச்னை உருவானது. ஒரு சிங்கிள் ரிலீஸில் தொடங்கி சமீபத்தில் வெளியான ட்ரைலர் வரை படம் எதிர்த்த பிரச்னைகள் தான் அதிகம். தொடர்ச்சியாக ரிலீஸிலும் சர்ச்சைகள் உருவானது.
படக்குழு அதிகாலை காட்சி கேட்க தமிழக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் விடாப்பிடியாக நீதிமன்றம் போய் மனு போட்டு பார்க்க அவர்களும் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். அதையெடுத்து சரி கொடுக்கப்பட்டு இருக்கும் 5 காட்சிகளை முடிக்க வேண்டும்.
இதையும் வாசிங்க: பாக்கியலட்சுமி: அட ஒன்னு விட்டா இன்னொன்னு…! கணேஷுக்கு ப்ரேக்கு..! அடுத்து மாலினி தானே!
அதனால் காலை 9 மணிக்கு பதில் 7 மணிக்கு படத்தினை ரிலீஸ் செய்ய கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கும் நீதிமன்றம் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த கூறி உத்தரவிட்டது. அதையடுத்து நேற்று அரசிடம் மனு கொடுக்க சென்ற தயாரிப்பு தரப்பு காரும் விபத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து பல வழிகளிலும் மோதிவிட்டும். எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டியோஸ் நிறுவனம் நாளை காலை 7 மணி காட்சிகள் இல்லை என அறிவித்து விட்டது. ஏற்கனவே அரசு அறிவித்தப்படி 9 மணியில் இருந்து தான் காட்சிகள் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக கூறி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஒருவழியாக உங்க பிரச்னையை முடிச்சிட்டீங்களா. நாளைக்கு படத்தில் சந்திப்போம் என கலாய்த்து வருகின்றனர்.
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…