தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து வசூல் மன்னனாக இருந்தவர் விஜய். தற்போது ரஜினி படங்களுக்கு நிகராகவும், அல்லது அவரின் படங்களை விட அதிக வசூலையும் பெறும் நடிகராக விஜய் மாறிவிட்டார். அதனால்தான் அவரின் சம்பளம் ரூ.200 கோடி வரை உயர்ந்துவிட்டது. லியோ படத்திற்கு ரூ.125 கோடி சம்பளம் வாங்கியுள்ள விஜய் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு ரூ.200 கோடி வாங்கியுள்ளார் என சொல்கிறார்கள்.
ரூ.200 கோடி வரை விஜய் தனது சம்பளத்தை உயர்த்தியதற்கு காரணம் லியோ படம் உருவான போது அது அடைந்த வியாபாரம்தான். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று விக்ரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. அடுத்து ஹீரோ விஜய் என்பதுதான். ஏனெனில், வசூலிலும், வாங்கும் சம்பளத்திலும் விஜய்தான் இப்போதைக்கு நம்பர் ஒன். அவருடைய ஒவ்வொரு படமும் வசூலில் உச்சத்தை தொட்டு வருகிறது.
இதையும் படிங்க: இப்பதான்டா நிம்மதி!.. விஜய் மீதுள்ள காண்டை சீரியலில் காட்டிய எஸ்.ஏ.சி.. வீடியோ பாருங்க…
அந்த வகையில் லியோ படத்தின் ப்ரீ பிஸ்னஸ் என சொல்லப்படும் ரிலீஸ்க்கு முன்பே நடந்த வியாபாரமும் உச்சத்தை தொட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் எந்த வினியோகஸ்தரிடமும் கொடுக்கவில்லை.
ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடிவரை கொடுக்க வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள். கேரள உரிமை ரூ.15 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா சேர்த்து ரூ.20 கோடி, கர்நாடகா ரூ.12 கோடி, ஓவர் சீஸ் என சொல்லப்படும் வெளிநாட்டு உரிமை ரூ.55 கோடி, ஹிந்தி சேட்டிலைட் உரிமை ரூ.22 கோடி, டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ் ரூ.125 கோடி, தொலைக்காட்சி உரிமை சன் டிவி ரூ.70 கோடி. ஆடியோ உரிமை ரூ.15 கோடி என மொத்தம் ரூ.434 கோடிக்கு இப்படம் விலை போயுள்ளது.
இது படம் வெளியாவதற்கு முன்பே எனில் படம் வெளியான பின் ரூ.125 கோடியை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மொத்தக இப்படம் ரூ.559 கோடி வரை வசூல் என சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் கொஞ்சம் கூட, குறைவாக கொஞ்சம் இருந்தாலும் எப்படியும் லியோ படம் ரூ.550 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என சினிமா வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரோலெக்ஸுக்கே டஃப் கொடுக்கும் ஹரோல்டு தாஸ் அர்ஜூன்.. மிரட்டலான லியோ க்ளிம்ஸ் வீடியோ
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…