லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் செய்த வேலை!.. இது எங்க போய் முடியுமோ!…

0
340
leo
leo

Leo special show: சினிமா உலகிலும் சரி, சமூகவலைத்தளங்களில் சரி தற்போது அதிகம் விவாதிக்கப்படுவது லியோ படம் பற்றியும், அந்த படம் சந்திக்கும் சிக்கல்களையும் பற்றித்தான். லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து அப்படம் வியாபாரத்திற்கும், புரமோஷனுக்கும் தயாரான போதே சிக்கல்களும் கூடவே வந்தது.

சேட்டிலைட் நிறுவத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இப்படத்தின் ஹிந்தி வெளியிட்டு உரிமை விற்க முடியவில்லை. விஜய் ரசிகர்கள் ஆவருடன் எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. அதோடு, இந்த படத்தின் டிரெய்லரில் விஜய் பேசிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. லாபத்தை பங்கு பிரிப்பதில் சதவீத கணக்கில் உடன்பாடு ஏற்படாமல் சில நாட்களாக முன்பதிவு துவங்கப்படாமலேயே இருந்தது. இந்த படத்தில் நடனமாடிய நடன கலைஞர்கள் 1200 பேர் தங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை எனக்கூறி புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு சித்தார்த் குரல் கொடுத்தாரா?.. ஏன் லியோவுக்கு 4 மணி காட்சி கொடுக்கல.. அமீர் ஆதங்கம்!..

ஒருபக்கம் அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு லியோ பட தயாரிப்பாளர் அனுமதி கேட்டு அரசுக்கு விண்ணப்பம் அனுப்பினார். ஆனால், ஒரு மாதம் அமைதியாக இருந்த அரசு தரப்பு 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. ஆனால், முதல் காட்சி எத்தனை மணிக்கு திரையிட வேண்டும் என்பது குறிப்பிடவில்லை என்பதால் குழப்பம் நீடித்தது.

அதன்பின், அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை. காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையிட வேண்டும். இறுதிக்காட்சியை இரவு 1.30 மணிக்குள் முடித்துகொள்ள வேண்டும் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது. இது தயாரிப்பாளருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: லியோ கதை புதுசுன்னு நான் சொல்லவே இல்லையே!.. போட்டு தாக்கும் லோகேஷ் கனகராஜ்..

ஏனெனில் சிறப்பு காட்சி என்கிற பெயரில் டிக்கெட்டை பல ஆயிரத்திற்கும் விற்று கல்லா கட்டலாம் என தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் காத்திருந்தனர். ரசிகர்களோ அதிகாலையே இப்படத்தை பார்த்துவிட வேண்டும் என மிகவும் ஆவலாக இருந்தனர். தற்போது அரசு ஆப்பு வைத்துவிட்டதால் அது இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில், லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரவேண்டும். மற்றும் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே அடுத்த காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டும் எனகூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் முறையீடு செய்துள்ளது. மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வரவிருக்கிறது.

google news