படம் பார்க்க அங்க போய்ட்டாங்க!.. வசூல்லாம் போச்சி!.. புலம்பும் லியோ பட தயாரிப்பாளர்....

Leo Collection: விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது. பொதுவாக ரஜினி - கமல் ரசிகர்களுக்குள்தான் பல வருடங்களாக போட்டி இருந்து வந்தது. ஆனால், கமலின் படங்கள் ரஜினி படங்கள் அளவுக்கு வசூல் செய்யவில்லை என்பதால் அந்த இடத்தை விஜய் பிடித்தார்.
விஜயின் படங்கள் நல்ல வசூலை பெற்றதால் அவரின் சம்பளமும் அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு சில படங்களில் ரஜினியை விட அவர் அதிக சம்பளமும் பெற்றார். இதனால் ரஜினியின் போட்டியாளராக விஜய் பார்க்கப்பட்டார். சமூகவலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மோதிக்கொண்டனர்.
இதையும் படிங்க: லியோ இத்தனை கோடி வசூல்னு நல்லா வடை சுடுறீங்க!.. புள்ளிவிபரத்தோடு புட்டு வைக்கும் புள்ளிங்கோ!…
ஜெயிலர் பட விழாவில் பேசிய ரஜினி பருந்து - காக்கா கதையை சொன்னார். அது விஜயைத்தான் என அவரின் ரசிகர்கள் நினைத்தனர். இது அவர்களுக்கு கோபத்தையும் ஏற்படுத்தியது. ஜெயிலர் திரைப்படம் ரூ.700 கோடி வசூல் செய்து சாதனை படைக்க, விஜயின் லியோ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என விஜய் ரசிகர்கள் சொல்லி வந்தனர்.
ஏனெனில், படம் வெளியாவதற்கு முன்பே இப்படம் ரூ.450 கோடி வியாபாரம் ஆனதாக சொல்லப்பட்டது. ஆனால், லியோ திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, சில தியேட்டர்களில் தாமதமாக படம் வெளியானது, ஹிந்தியில் இப்படம் வெளியாகாமல் போனது என சில சிக்கல்கள் ஏற்பட்டது.
இதையும் படிங்க: லியோல செஞ்ச தப்ப இனி செய்யக் கூடாது! உஷாரா முரட்டு வில்லன தட்டித் தூக்கிய லோகேஷ் – மிரள வைக்கும் ரஜினி171
தற்போது படம் வெளியாகி ஒரேநாளில் ரூ.145 கோடி வசூல் செய்துள்ளதாக பட நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் ‘லியோ படம் ஆயிரம் கோடி வசூலை பெற வாய்ப்பில்லை. ஹிந்தியில் படம் வெளியாகவில்லை. அதில் நல்ல லாபத்தை எதிர்பார்த்தோம்.
தமிழகத்திலிருந்து 2 லட்சம் பேர் அதிகாலை 4 மணி காட்சியை படம் பார்க்க பக்கத்து மாநிலங்களுக்கு போய்விட்டார்கள். விஜய் இதில் தலையிடவில்லை. அவர் என்னை நீதிமன்றத்தை அணுக சொன்னார். மற்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாக வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை’ என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கே படம் பிடிக்கலையா!.. கடைசி வரை லியோவை கண்டுக்காமல் விட காரணமே அதுதானா?..