நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 12 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை பிகில் மற்றும் வாரிசு உள்ளிட்ட படங்கள் அதிகபட்சமாக 300 கோடி வசூலை ஈட்டிய நிலையில், முதல்முறையாக நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டியுள்ளது.
இதையும் படிங்க: கதையே இல்லாமல் அஜித்தை நடிக்க அழைத்த இயக்குனர்… சரியான பாடம் சொல்லி கொடுத்த தல…
கடந்த ஆண்டு வெளியான விக்ரம், பொன்னியின் செல்வன், இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் என அனைத்து ரெக்கார்டுகளையும் அசால்ட்டாக நடிகர் விஜய் லியோ படத்தின் மூலம் முறியடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் அதிகபட்சமாக 525 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்ததுடன் அதன் பின்னர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவே இல்லை.
இதையும் படிங்க: தனியா வந்தா ஆப்பு வச்சிருவாங்க! எதிராளியுடன் கூட்டணி வைத்த விஜய் – லியோ சக்ஸஸ் மீட்டில் யார் வராங்கனு தெரியுமா?
இந்நிலையில், முதல் வாரம் கிடைத்த தொடர் 6 விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொண்டு லியோ 460 கோடி எடுத்த நிலையில், தற்போது 2வது வாரமான சனி மற்றும் ஞாயிறு மீண்டும் படம் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில், ஒட்டுமொத்தமாக 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலை லியோ ஈட்டியுள்ளதாக அஃபிஷியல் அப்டேட் கிடைத்துள்ளது.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்தி விட்டதாகவும் மீசை ராஜேந்திரன் எப்போ மீசையை எடுக்கப் போகிறார் என்றும் விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தை முந்தட்டும் என திடீரென ரஜினி ரசிகர்கள் எல்லாம் ஜெயிலரில் இருந்து 2.0 படத்துக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…