லியோ விமர்சனம்.. ஐயா லோகேஷ் இதுதான் உன் 100 சதவீதமா?.. பாவம் சார் விஜய்!

by Saranya M |
லியோ விமர்சனம்.. ஐயா லோகேஷ் இதுதான் உன் 100 சதவீதமா?.. பாவம் சார் விஜய்!
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் பவானி என்கிற பவர்ஃபுல் வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருப்பார். ஆனால், இங்கே லியோவில் அது ரொம்பவே மிஸ் ஆன நிலையில், மொத்த படமும் விஜய்யின் மாஸ் படமாக மட்டுமே மாறி நிற்கிறது. இது கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் 100 சதவீதம் இல்லை விஜய்யின் 100 சதவீதம் படம் என்று தான் தெரிகிறது.

ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை எந்தளவுக்கு மெருகேற்றுகிறேன் என்கிற பெயரில் கெடுத்து வைக்க முடியுமோ அந்த வேலையை கச்சிதமாக லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் மூலம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு பக்க பலமே இவர்தான்! எல்லா கேரக்டருக்கும் செட்டாகக் கூடிய ஆள் – லோகேஷ் சொன்ன அந்த நடிகர்?

20 வருஷத்துக்கு முன்னாடி இருந்த சஞ்சய் தத், அர்ஜுன் எல்லாம் 20 வருஷம் கழித்து மீண்டும் அழகா இருக்கும் போது, லியோ தாஸ் லுக் மட்டும் ஏன் இப்படி கொடூரமா மாறிடுச்சுன்னு தான் தெரியல.. சில இடங்களில் விஜய்க்கு அந்த லுக் சுத்தமாக செட்டாகவில்லை.

பழைய பாடல்களை சண்டைக் காட்சியில் வைக்கிறேன் என கரு கரு கருப்பாயி, நான் பொல்லாதவன் உள்ளிட்ட பாடல்களை வைத்துள்ளார். ஆனால், சமீபத்தில் வந்த மார்க் ஆண்டனி படத்தில் இடம்பெற்றதை போல மாஸாக அந்த பாடல்கள் இல்லை.

இதையும் படிங்க: லியோவை பாராட்டி டிவிட்!.. இது கேஜிஎஃப் பட இயக்குனர்தானா?!. அங்கதான் இருக்கு டிவிஸ்ட்…

பார்த்திபனை லியோ என ஆண்டனி தாஸ் தேடி வர தான் லியோ இல்லை என சொல்லியே அனைவரையும் லியோவை விட படு பயங்கரமாக போட்டுத் தள்ளுவதெல்லாம் அதுக்கு நீ லியோவாவே இருந்திருக்கலாமே பாஸ் என்று தான் கேட்கக் தூண்டுகிறது.

தங்கச்சியாக வரும் மடோனா சபாஸ்டியன் நா ரெடி தான் பாடல் முடிந்த உடனே கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். லியோ தாஸையும் சுட்டுத் தள்ளிய பின்னரும், அவர் எப்படி பிழைத்து பார்த்திபனாக வாழ்கிறார் என்றே தெரியவில்லை. அதை துணிவு படத்தில் அஜித்தை காட்டியது போல காட்டாமல் விட்டதே பரவாயில்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எல்சியூ கனெக்ட் இருக்கு, விக்ரம் 3ல் மீண்டும் லியோ என்ட்ரி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும்.

ஆனால், லியோவில் ட்ரீட்டாக இருந்தது என்றால்? அது ஓகே ரகம் தான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 300 கோடி படத்தை இப்படி ஸ்டன்ட் காட்சிகளை மட்டும் வைத்து எடுத்திருப்பதற்கு பதிலாக பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தை வைத்திருக்கலாம். சஞ்சய் தத் பலி கொடுப்பது எல்லாம் ரஜினியின் கழுகு படத்திலேயே பார்த்தாச்சு பாஸ்!

லியோ - அய்யோ!

ரேட்டிங் - 2.5/5.

Next Story