ரசிகர்களின் காயத்துக்கு மருந்து போட தயாரான விஜய்!.. லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போ வருது தெரியுமா?..

Published on: September 27, 2023
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30ம் தேதி நடக்கும் விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு பிறகு லியோ படத்தின் ஹைப் தெறிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக திடீரென லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண ஆவலுடன் காத்திருந்த தளபதியின் ரத்தமார்கள் தாங்காத வேதனையில் துடித்துக் கொண்டிருந்த நிலையில், உடனடியாக அவர்களது காயங்களுக்கு மருந்து போட வெறித்தனமாக லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீட்டு தேதியை தற்போது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டு சோக டிரெண்டை சந்தோஷ டிரெண்டாக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க: மோஷன் போற இடத்துல என்ன ஃபேஷன்!.. என்ன சிம்ரன் இதெல்லாம்!.. பிக் பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!..

லியோ படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் மற்றும் பிஜிஎம் உள்ளிட்டவற்றை கேட்டு ஆட்டம் போட காத்திருந்த ரசிகர்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழா ஏமாற்றத்தை அளித்தாலும், செகண்ட் சிங்கிளை அனிருத் சரவெடியாக போட்டுக் கொடுத்திருப்பார் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.

Badass எனும் டைட்டிலில் உருவாகி உள்ள லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை  ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!.. நயன்தாராவிடம் சரண்டரான ஜெயம் ரவி.. கருணை காட்டிய மூக்குத்தி அம்மன்!..

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் லியோவின் நா ரெடி பாடலை விட ஹிட் அடித்த நிலையில், லியோ படத்தின் செகண்ட் சிங்கிளை அனிருத் எந்தளவுக்கு பேடாஸாக உருவாக்கி இருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானால் அதனை மிகப்பெரிய சாதனை பாடலாக மாற்றவும் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் ஸ்பேஸ் போட்டு தற்போது பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.