லியோ செகண்ட் சிங்கிள் வெளியாகுமா?!.. எல்லாமே அவர் கையில்தான் இருக்காம்!.. பரபர அப்டேட்...

by சிவா |   ( Updated:2023-09-12 07:39:30  )
leo
X

விஜய் ரசிகர்கள் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தபின் லோகேஷ் இயக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படமும் லோகேஷின் முந்தைய படங்கள் போல ஒரு கேங்ஸ்டர் படமாகவே உருவாகியுள்ளது. அதிலும் இப்படத்தில் அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கவுதம் மேனன், பாபு ஆண்டனி, திரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் பரபர ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினிக்கு வெண்ணெய்!.. விஜய்க்கு மட்டும் சுண்ணாம்பா.. கத்தரி போடும் சென்சார்.. லியோ தலை தப்புமா?..

மேலும் இண்டர்வெல் பிளாக் சும்மா தெறிக்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரே கூறினார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது மற்ற பணிகள் நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ‘நான் ரெடி’ பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால் படத்தின் புரமோஷன் வேலைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தின் செகண்ட் சிங்கிள் அதாவது இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: லியோ படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர்… என்ன ஜி இப்டியா பண்ணுவீங்க! கடுப்பான லோகேஷ்!

இந்த மாதம் 2வது வாரத்தில் லியோ படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், இப்போது வரை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இது அனிருத்தின் கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்பாடலுக்கான ஃபைனல் மிக்‌ஷின் வேலையை அனிருத் செய்து வருகிறாராம். இது முடிவடைந்துவிட்டால் இந்த மாதம் 15 அல்லது 16ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஒருவேலை அனிருத் இந்த வேலையை முடிக்காவிட்டால் லியோ படத்தின் 2ம் பாடல் இம்மாதத்தின் 3வது வாரத்தில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் வாலியிடம் போட்ட கண்டிஷன்..வாலியோட ரியாக்‌ஷன் என்னனு தெரியுமா!..

Next Story