Connect with us
Leo

Cinema News

கடுப்பான விஜய்!.. லியோ படத்துக்கு வந்த சிக்கல்!. இப்படி கட்டைய போட்டா என்னதான் பன்றது!..

விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ, பிரியா ஆனந்த் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்,  வெளிப்புறத்தில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் இருக்கிறதாம். ஆனால் அந்த காட்சிகளை சென்னையில் படமாக்காமல் ஹைதராபாத்திற்கு சென்று படமாக்கலாம் என படக்குழுவினர் யோசித்து வருகிறார்களாம்.

அதாவது சென்னையில் தற்போது “லியோ” படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரசாத் ஸ்டூடியோவிற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்காக தினமும் வந்து காத்திருக்கிறார்களாம். ஆதலால் சென்னையில் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த படக்குழுவினருக்கு தயக்கமாக இருக்கிறதாம். எனவே வெளிப்புற படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வைத்துக்கொள்ளலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இந்த செய்தியை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான  வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: வடிவேலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுண்டமணி… விஜயகாந்த் செய்த துணிகர காரியம்… என்ன நடந்தது தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top