ஜெயிலரை காலி செய்த லியோ!. 24 மணி நேரத்தில் இத்தனை கோடியா?!.. செம மாஸ்தான்!...
Leo vs Jailer: சினிமா என்றாலே போட்டிதான். யாருடைய படத்தின் வசூலை எந்த ஹீரோ முறியடிக்கிறார் என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு படம் எவ்வளவு வரவேற்பை பெறுகிறதோ, எத்தனை கோடியை வசூல் செய்கிறதோ அதை வைத்துதான் அந்த நடிகரின் சம்பளமும், மார்க்கெட் மதிப்பும் கணக்கிடப்படும்.
ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால் உடனே அப்படத்தின் ஹீரோ தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிடுவார். இது காலம் காலமாக நடந்து வருவதுதான். நடிகர்கள் ஏற்றுகிறார்களோ இல்லையோ அவரை வைத்து படமெடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ஏற்றிவிடுவார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி - கமல் - அஜித் - விஜய் ஆகியோரிடம் இந்த போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க: அஜித் பேசுனா மட்டும் இனிக்குது! விஜய் பேசுனா கசக்குதா? அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தல மேல கை வச்சாச்சா?
விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் களத்தில் இறங்கி தனது சம்பளத்தை ரூ.130 கோடியாக கமல் ஏற்றிவிட்டார். இப்போதெல்லாம் ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தயாரிப்பாளரை விட நடிகர்களின் ரசிகர்கள் பார்க்க துவங்கிவிடுவார்கள். வசூல் மட்டுமில்ல. டீசர், டிரெய்லர் ஆகியோ வீடியோக்களிலும் இந்த போட்டி நிலவுகிறது.
அஜித்தின் டிரெய்லர் வீடியோவை எத்தனை பேர் பார்த்தார்களோ அதை விட அதிகமான வியூசை விஜய் பட வீடியோ பெறவேண்டும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுபற்றி தகவல்களை சமூகவலைத்தளங்களிலும் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: நீங்க பேசாம தமிழ்ப்படம் 3-ஐயே எடுத்திருக்கலாம் சி.எஸ். அமுதன்!.. ரத்தம் விமர்சனம் இதோ!..
லியோ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 30 மில்லியன் (3 கோடி) பார்வைகளை கடந்து ரஜினியின் ஜெயிலர் பட டிரெய்லர் வீடியோ சாதனையை முறியடித்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து எங்கள் தளபதியை ரஜினியால் ஜெயிக்க முடியாது என பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரம், டிரெய்லர் வீடியோவை பார்த்தவர்கள் எல்லோரும் படம் பார்க்க வரமாட்டார்கள். ஜெயிலர் படம் ரூ.700 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. லியோ படம் இதை தாண்டி வசூல் செய்தால் மட்டுமே விஜய் ரஜினியை தாண்டியதாக சொல்ல முடியும். ஆனால்,அப்படி நடக்க வாய்ப்பில்லை என திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் சொல்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எலி பட இயக்குநரின் இந்த படம் வென்றதா? கொன்றதா?.. இறுகப்பற்று விமர்சனம் இதோ!..