Connect with us
vijayakanth rajini

Cinema History

விஜயகாந்த் பேர சொல்லி ஏமாற்றிய ராவுத்தர்!.. ரஜினி படத்தை மிஸ் பண்ண இயக்குனர்!…

Vijayakanth: சினிமா என்பதே போட்டி, பொறாமைகள் இருக்கும் உலகம். அதற்கு காரணம் பல கோடிகள் புழங்கும் தொழில் அது. அதனால்தான் வெற்றி நமக்கு மட்டுமே வர வேண்டும் என பலரும் சுயநலமாக நடந்து கொள்வார்கள். ஒரு நல்ல கதை ஒரு நடிகருக்கு போகாமல் தடுப்பார்கள்.

ஒரு ஹீரோ உருவாகாமல் தடுப்பார்கள். ஒரு நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனருக்கு வாய்ப்பு வராமால் தடுப்பார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் மூலம் வாய்ப்பு வந்தாலும் அந்த இயக்குனர் பற்றி இல்லாத ஒன்றை சொல்லி அவரை கழட்டிவிட முயற்சிகள் செய்வார்கள். இதையெல்லாம் மீறித்தான் இங்கே ஒரு நடிகரும், இயக்குனரும் உருவாகிறார்கள்.

இதையும் படிங்க: நடிப்பு சரியில்லன்னு சொன்ன இயக்குனர்… சிவாஜியை சமாளித்த கமல்..!

விஜயகாந்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்துக்காக கதை கேட்பது, அவருக்கான சம்பளத்தை பேசி வாங்குவது என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டவர் அவர்தான். பணம் வேண்டுமெனில் விஜயகாந்தே அவரிடம்தான் கேட்பார்.

ராவுத்தர் எந்த படத்தில் நடிக்க சொன்னாலும் விஜயகாந்த் நடிப்பார். விஜயகாந்த் படங்கள் நல்ல வசூலை பெற துவங்கியதும் ராவுத்தர் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி விஜயகாந்தை வைத்து பல படங்களை தயாரித்தார். ராவுத்தரை போலவே விஜயகாந்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான்.

கேப்டன் பிரபகாரன் படத்திற்கு வசனம் எழுதியவர் இவர்தான். விஜயகாந்தை வைத்து பாட்டுக்கு ஒரு தலைவன், ஏழை ஜாதி, எங்க முதலாளி ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் தொடர்பான பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது ராவுத்தரால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோனதாக சொல்லி இருக்கிறார்.

kanth4

liaquat ali khan

ஒருமுறை ஏவிஎம் நிறுவனத்திடம் ஒரு கதை சொன்னேன். ஏவிஎம் சரவணனுக்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போனது. ரஜினி ஹீரோ என முடிவு செய்யப்பட்டு, 25 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நீங்களே இயக்குங்கள் என சொல்லிவிட்டார்கள்.

இதை நான் ராவுத்தரிடம் போய் சொன்னபோது ‘அந்த கதையை படமாக நாமே எடுப்போம். விஜயகாந்த் நடிக்கட்டும்’ என சொல்லிவிட்டார். ஆனால், சொன்னபடி அந்த கதையை அவர் படமாக எடுக்கவில்லை. இதனால், ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஒருமுறை இல்லை. இரண்டு முறை எனக்கு அப்படி நடந்தது’ என லியாகத் அலிகான் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: போட்றா வெடிய!.. ரஜினிக்காக பாடும் சிம்பு… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

google news
Continue Reading

More in Cinema History

To Top