திடீரென திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை…. சோகத்தில் ரசிகர்கள்….

Published on: October 6, 2021
Lijomol Jose
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக நடிகைகள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் புதிதாக வரும் அனைத்து நடிகைகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதில்லை. ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களது நடிப்பு மற்றும் வசீகர தோற்றம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள்.

அப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை லிஜோமோல் ஜோஸ். தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் அறிமுகமானவர் தான் லிஜோமோல் ஜோஸ். இப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு மனைவியாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Lijomol Jose

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தீதும் நன்றும் என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக லிஜோமோல் ஜோஸ் நடித்திருந்தார். இதுதவிர வரும் நவம்பர் 2ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ஜெய் பீம் படத்திலும் லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒத்த செல்பியில் மொத்த அழகையும் காட்டிய கிரண்…ஜொள்ளு விடும் ரசிகர்கள்…

தமிழ் தவிர மலையாளத்திலும் பல படங்களில் பிசியாக நடித்து வந்த லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெயர் அருண் ஆண்டனி. இவர்கள் திருமணம் கடந்த 4ஆம் தேதி கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

Lijomol Jose

தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திருமண புகைப்படங்களை இணையத்தில் கண்ட சக நடிகர் மற்றும் நடிகைகள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment