More
Categories: Cinema News latest news

சமந்தாவுக்காக தனி கப்பல்…தனித்தீவு…பல கோடிகளை இறைத்த லிங்குசாமி…..

தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் லிங்குசாமி. அதன்பின் சண்டக்கோழி, ஜீ, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். சமீபத்தில் கூட அவரின் இயக்கத்தில் வாரியர் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.

மேலும், அஞ்சான் மற்றும் கமல் நடித்த ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களை தயாரித்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் லிங்குசாமி கடந்த சில வருடங்களாகவே கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்தார்.

Advertising
Advertising

இந்நிலையில், 2014ம் ஆண்டு கார்த்தி மற்றும் சமந்தாவை வைத்து ‘ என்னி ஏழு நாள்’ என்கிற படத்தை இயக்குவதற்காக பிவிபி கேப்பிட்டல் என்கிற நிறுவனத்திடம் லிங்குசாமி பெற்ற கடன் தொகை ரூ.1.03 கோடியை இதுவரை செலுத்தவில்லை என லிங்குசாமி மீது நீதிமன்றத்தில் பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேலும், லிங்குசாமி கொடுத்த காசோலை பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து லிங்குசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, போலீசார் அவரை கைது செய்யவில்லை.

அஞ்சான் படத்தில் இடம் பெறாத ஒரு பாடல் ஒன்றுக்காக ஒரு தனிக்கப்பலை வாடகைக்கு எடுத்து சமந்தாவுக்காக சில கோடிகளை கொட்டி ஒரு தனித்தீவில் ஒரு பாடல் காட்சியை எடுத்தார் லிங்குசாமி. ஆனால் தற்போது ரூ.1 கோடி கடனுக்காக வழக்கில் சிக்கியிருப்பது அவரின் குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
சிவா

Recent Posts