வாடிவாசல் படத்தை சூர்யாவை வைத்து ஃபிளாப் படம் கொடுத்த இயக்குனர் பண்ண நினைத்தாரா?.. வசந்தபாலன் ஷாக்!

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தின் பூஜை போடப்பட்டது. சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் செட் அமைத்து சாலைகள் தேர்வு செய்த பணிகளும் நடைபெற்றன.
அந்த காளைகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவருமே மற்ற படங்களின் பிசியாக உள்ள நிலையில் வாடிவாசல் பல ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் கிடந்து வருகிறது.
இதையும் படிங்க: சந்தானத்துக்கு இருக்குற விசுவாசம் சிவகார்த்திகேயனுக்கு இல்லை!.. அமரனை அசிங்கப்படுத்திய பிரபலம்!..
கங்குவா படத்தை முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு, அந்தப் படத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கிறேன் என அறிவித்துவிட்டு அந்தப் படத்தை டிராப் செய்தார் சூர்யா. அதன் பின்னர் பாலாவுக்கு பட வாய்ப்பு கொடுக்கிறேன் என வணங்கான் படத்தை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். சில கோடிகள் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை என அந்தப் படத்தை அப்படியே டிராப் செய்து விட்டார்.
இதையும் படிங்க: விஜய் மட்டும்தானா?!. நானும் வரேன்!.. ரீ ரிலீஸாகும் கமலின் சூப்பர் ஹிட் திரைப்படம்!..
வாடிவாசல், புறநானூறு படங்கள் கிடப்பில் கிடக்கும் நிலையில், விரைவில் வாடிவாசல் கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறாரா அல்லது வேறு யாராவது வைத்து இயக்கப் போகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் வெற்றிக்கு பிறகு பேட்டி அளித்த வசந்தபாலன் ஆரம்பத்தில் இந்த படத்தை லிங்குசாமி இயக்க திட்டமிட்டார் என்று வசந்தபாலன் கூறியுள்ளார். சூர்யாவை வைத்து ஏற்கனவே அஞ்சான் என்னும் ஃபிளாப் படத்தை இயக்கிய லிங்குசாமி வாடிவாசல் படத்தை இயக்கி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நீங்க நல்லா நடிச்சாலும் படம் ஏன் ஓடுறதில்ல?!.. அஜித்திடம் கேட்ட கேள்வி!.. ஏகே சொன்ன நச் பதில்!..
இயக்குனர் வசந்தபாலன் வாடிவாசல் படத்தை இயக்க நினைத்ததாகவும், அந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க நினைத்த நிலையில் படத்தில் ஜல்லிக்கட்டை தவிர வேறு எதுவும் பெரிதாக இல்லையே என்பதால் அதனை விட்டுவிட்டேம் என்றும் கூறியுள்ளார்.