“ஷங்கருக்கு வேள்பாரியை அறிமுகப்படுத்திய லிங்குசாமி??...” ஆனா உண்மை என்னன்னு தெரியுமா??
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், தற்போது தமிழில் “இந்தியன் 2” திரைப்படத்தையும் தெலுங்கில் ராம் சரணை வைத்து “RC 15” என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இவ்வாறு படு பிசியாக இருக்கும் ஷங்கர், “வேள்பாரி” நாவலை திரைப்படமாக்குவதற்கான உரிமையை வாங்கியுள்ளார் என சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது.
சு.வெங்கடேசன் எழுதிய வரலாற்றுப் புனைவு நாவல்தான் “வேள்பாரி”. சங்ககாலத்தில் வாழ்ந்த பாரி என்ற மன்னனுடன், சேர சோழ பாண்டியர்களான மூவேந்தர்கள் போர் புரிந்ததை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல், வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. “பொன்னியின் செல்வன்” நாவலை போலவே “வேள்பாரி” நாவலும் அதிக பிரதிகள் விற்று வருகின்றன.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர், “வேள்பாரி” நாவலை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். 1000 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாக உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. மேலும் இதில் சூர்யா, வேள்பாரியாக நடிக்கிறார் எனவும், இத்திரைப்படம் 3 பாகங்களாக வெளிவருகிறது எனவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது அவர் வாசித்த புத்தகங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது “ஷங்கர் சார் வேள்பாரி நாவலை திரைப்படமாக உருவாக்கு உள்ளதாக நான் கேள்விபட்டேன். ஆதலால் அந்த நாவலை இப்போது படிக்கத் தொடங்கி உள்ளேன். சமீபத்தில் யாரோ ஒருவர் ஒரு பேட்டியில், நான்தான் ஷங்கர் சாரிடம் வேள்பாரி நாவலை படிக்கச் சொன்னதாக கூறினார்கள்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் வீட்டில் அடுப்பு எரிய உதவிய சின்னப்பா தேவர்… திரையுலகமே போற்றிய நட்பின் தொடக்கம் இதுதான்…
ஆனால் உண்மை என்னவென்றால், வேள்பாரி நாவலை எனக்கு அறிமுகப்படுத்தியது ஷங்கர்தான். இதை நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என வெளிப்படையாக கூறியுள்ளார்.