Kamalhaasan: பொதுவாக எல்லா துறைகளிலுமே ஒன்றை கொண்டாட பார்ட்டி நடத்துவார்கள். சினிமா துறையில் இது மிகவும் அதிகம். ஒரு படத்தின் பூஜை, துவக்க விழா, படத்தின் வெற்றி என எதுவாக இருந்தாலும் பார்ட்டி கொடுப்பார்கள். சில சமயம் தயாரிப்பாளர்கள், சில சமயம் இயக்குனர்கள், சில சமயம் நடிகர்கள் என பார்ட்டி கொடுப்பவர்கள் மாறுபடுவார்கள்.
எல்லோரின் பார்ட்டியிலும் பலருக்கும் அழைப்பு விடுவார்கள். மது அங்கே கரை புரண்டு ஓடும். இது பல வருடங்களாக நடந்து வருகிறது. அதுவும் ஒரு படம் வெற்றி பெற்று வசூலை அள்ளும்போது பார்ட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும். அந்த பார்ட்டிக்கு வருபவர்களில் 95 சதவீதம் பேர் மது அருந்துவார்கள்.
இதையும் படிங்க: கைவிட்ட இளையராஜா.. கங்கை அமரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பாக்கியராஜ்…
மதுபோதை தலைக்கு ஏறும்போது அங்கே பல காமெடிகளும், லீலைகளும் அரங்கேறும். வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அசிங்கமான சம்பவங்களும் அங்கே நடக்கும். அதெல்லாம் வெளியே வராது. அல்லது வெளியே வராமல் பார்த்துக்கொள்வார்கள். பண்ணை வீடு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் என பல இடங்களையும் இந்த பார்ட்டிக்கு தேர்ந்தெடுப்பார்கள்.
பண்ணை வீடென்றால் சொல்லவே தேவையில்லை. ஒரே கும்மாளம்தான். நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு வருடம் தனது பிறந்தநாளுக்கு திரையுலகில் தனக்கு நெருக்கமான பலருக்கும் பார்ட்டி கொடுப்பார். அப்படி நடந்த ஒரு விழாவில் இயக்குனர் லிங்குசாமியும் கலந்து கொண்டார்.

அப்போது மதுபோதை தலைக்கேறிய லிங்குசாமி கமல்ஹாசனின் தோள் மீது கை போட்டு பேசியிருக்கிறார். இது கமலுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால்தான் அவரின் தயாரிப்பில் உத்தம வில்லனை படத்தை எடுத்து கமல் அவரை காலி செய்ததாக வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றில் கூறி அதிர வைத்திருக்கிறார்.
இந்த படம் நஷ்டமானதும் கமல் மீண்டும் லிங்குசாமிக்கு ஒரு கமர்ஷியல் படத்தை கொடுப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். அவரும் எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கத்திலும் லிங்குசாமி புகார் கொடுத்தார். இது தொடர்பாக கமல்ஹாசனும் சங்கத்தோடு பேசி வருகிறார். கமல் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




