Cinema News
படம் எடுக்குறதே பயமா இருக்கு!.. பையா ரீ ரிலிஸ் நிகழ்ச்சியில் இப்படி சொல்லிட்டாரே லிங்குசாமி!..
ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. முதல் படத்திலேயே மம்மூட்டி, முரளி, அப்பாஸ், சினேகா, தேவயானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாதவன் மீரா ஜாஸ்மின் வைத்து ரன் படத்தை இயக்கினார்.
ரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் காதல் பிசாசு உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்த அஜித்தை வைத்து ஜி படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. விஷாலை வைத்து சண்டக்கோழி படத்தின் மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கண்ணதாசனின் கேள்வி! ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ பட வெற்றியின் ரகசியம்
சியான் விக்ரமை வைத்து இயக்கிய பீமா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பருத்திவீரனில் முரட்டுத்தனமான கார்த்தியை பார்த்த ரசிகர்கள் பையா படத்தில் செம க்யூட்டான கார்த்தியை பார்த்து பலரும் காதலில் விழுந்தனர். எளிமையான ரோடு மூவியாக வெளியான அந்த படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி இப்போதெல்லாம் படம் எடுக்க நினைத்தாலே பயமாக உள்ளது எனக் கூறியுள்ளார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய அஞ்சான் திரைப்படம் படு தோல்வியை அடைந்த நிலையில், அந்த படம் வெளியான சமயத்தில் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இங்க எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி!.. வண்டிய அங்க விடு!.. ஷங்கரோட நிலமை இப்படி ஆகிப்போச்சே!..
அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் படத்தையும் தற்போது ரீ எடிட் செய்து வெளியிடும் முடிவில் இருப்பதாக லிங்குசாமி கூறியிருக்கிறார்.
அஞ்சான் படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் விஷாலை வைத்து சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். அந்த படமும் ஓடவில்லை. அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் லிங்குசாமி இயக்கிய வாரியார் திரைப்படமும் ஃபிளாப் ஆனது. அடுத்த படத்தை இன்னும் நான்கு வருடங்கள் கழித்து லிங்குசாமியை இயக்குவாரா என்றும் ரசிகர்கள் கேட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு தக்காளி பழத்தால் சென்சாரில் சிக்கி தூக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…