இங்க எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி!.. வண்டிய அங்க விடு!.. ஷங்கரோட நிலமை இப்படி ஆகிப்போச்சே!..

தமிழ் சினிமாவில் முதன் முதலில் அதிக பட்ஜெட்டுகளில் படங்களை இயக்க துவங்கியவர் இயக்குனர் ஷங்கர். அதற்கு காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர் குஞ்சு மோன். அடுத்து அவர் இயக்கிய காதலன் படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி ஹிட் அடித்தது. அதன்பின் ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், 2.ஒ என எல்லாமே அதிக பட்ஜெட்டுகளில் எடுக்கப்பட்டது.

எனவே இந்திய அளவில் பெரிய இயக்குனராக பார்க்கப்பட்டார் ஷங்கர். அவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, தயாரிப்பாளர்களும் துணிந்து செலவு செய்தார்கள். ஆனால், இந்தியன் 2 படம் துவங்கிய போது ‘இதுதான் பட்ஜெட். இதற்குள் படத்தை முடித்து கொடுக்க வேண்டும்’ என ஒப்பந்தம் போட்டது லைகா நிறுவனம்.

இதையும் படிங்க: லால் சலாம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லையா?.. ரஜினிகாந்த் மகளால் அப்செட்டான லைகா நிறுவனம்?..

3 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்தியன் 2 படம் இன்னும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு முடிந்துவிட்டதா என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. ஒருபக்கம், இந்த படம் உருவாகும்போதே தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தை இயக்கினார் ஷங்கர்.

இந்த படத்தில் தெலுங்கில் அதிக பட்ஜெட்டுக்களில் படங்களை தயாரித்து வரும் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் 2 வருடங்களாக நடந்து வருகிறது. அதோடு பட்ஜெட்டும் பல கோடிகள் எகிறி வருகிறது. இதில் கடுப்பான தில் ராஜு ஆந்திராவில் ஷங்கரை பற்றி எல்லோரிடமும் சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: 5 ஆயிரம் கோடியை இறக்கும் அஜித் படத்தின் தயாரிப்பாளர்!.. பிரம்மண்டமாக உருவாகும் 12 படங்கள்!..

தமிழில் அதிக பட்ஜெட்டுக்களில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் இப்போது யாருமில்லை. விடாமுயற்சி படத்தை முடிக்க முடியாமல் லைக்காவே திணறி வருகிறது. எனவே, அதிக பட்ஜெட்டுகளில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பாலிவுட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களால்தான் ஷங்கர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியும்.

அதனால் சமீபத்தில் தனது பெண்ணின் திருமண பத்திரிக்கையை கொடுக்க மும்பை சென்ற ஷங்கர் சில தயாரிப்பாளர்களிடம் சென்று பேசியிருக்கிறார். அதோடு, முதல்வன் படத்தை ஹிந்தியில் நாயக் என்கிற பெயரில் அனில் கபூரை வைத்து எடுத்திருந்தார் ஷங்கர். இப்போது அனில் கபூரை சந்தித்து நாயக் 2 என பிட்டை போட்டிருக்கிறார் ஷங்கர். ஏற்கனவே அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் ஷங்கர் ஈடுபட்டு அது பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story