கோலிவுட்டின் மாஸ் ஹிட் படங்கள்… விஜய் நோ சொன்ன பெத்த லிஸ்ட்.. மிஸ் பண்ணிட்டீங்களே தளபதி…

#image_title
Vijay: தமிழில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய் மிகப்பெரிய ஹிட் லிஸ்ட்டை தன்னுடைய சினிமா கேரியரில் வைத்திருந்தாலும் அவர் மிஸ் செய்தது எல்லாமே காஸ்ட்லியான திரைப்படங்கள்தான். கிட்டத்தட்ட 13 க்கும் அதிகமான வெற்றி படங்களை தவற விட்டு இருக்கிறார் என்ன ஆச்சரிய லிஸ்ட் ஒன்று கசிந்துள்ளது.
முதலில் சங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் திரைப்படத்திற்கு விஜயிடம் பேசப்பட்டது. ஆனால் அப்படத்திலிருந்த அரசியல் கதையை மையமாக வைத்து தன்னால் நடிக்க முடியாது எனக்கூறி விஜய் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் உன்னை நினைத்து.
இதையும் படிங்க: விஜயிடம் போனில் பேசிய அஜித்!.. தளபதியிடம் தல சொன்னதுதான் ஹலைட்!….
இப்படத்தில் தனக்கான சில காட்சிகளை மாற்ற வேண்டும் என விஜய் கூறியதால் அவர் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா திரைப்படத்தின் கதையை விஜயிடம் கூறி இருக்கிறார். ஆனால் அப்படத்திலும் விஜய் நடிக்கும் முடியவில்லை. லிங்குசாமி இயக்கத்தில் மாஸ்க் திரைப்படமான சண்டக்கோழி விஜய் மற்றும் ஜோதிகாவிற்காக உருவாக்கப்பட்டது.
ஆனால் ஸ்கிரிப்ட் முடிக்கப்படாமல் விஜய் படத்தில் இருந்து வெளியேறினார். சேரன் இயக்கத்தில் உருவான ஆட்டோகிராப் திரைப்படத்தில் நடிக்க விஜய் ஆர்வம் காட்டினாலும் கால்ஷீட் காரணமாக நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. ஹரி இயக்கத்தில் சிங்கம் திரைப்படத்திலும் விஜய்யிடம் கதை சொல்லப்பட்டதாம்.

Vijay
ஆனால் அவர் ஏன் நடிக்காமல் போனார் என தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. லிங்குசாமி இயக்கத்தில் ரன் திரைப்படத்தின் கதை முதலில் விஜயிடம் சொல்லப்பட்டதாம். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. புலி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அனேகன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் விஜய் மறுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த குழந்தையே நீங்கதான் சார்!. அஜித்திடம் கதை சொல்லி பல்பு வாங்கிய நடிகர்!….
பொதுவாகவே கிளைமாக்ஸை முதலிலேயே எழுதாத ஒரு முக்கிய இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த காரணத்தால் காக்க காக்க திரைப்படத்தில் விஜய் ஆல் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தையும் முதலில் விஜயிடம் தான் கூறியிருக்கிறார். ஆனால் அவர் செய்ய முடியாமல் போன பின்னர் நவரச நாயகன் கார்த்தி அப்படத்தில் நடித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.