கூலி டீசர் வீடியோவில் லோகேஷ் செஞ்ச வேலைய கவனிச்சீங்களா?!.. அட இது தெரியாம போச்சே!...
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவர உள்ள படத்தின் தலைப்போட பெயர் கூலி. இது அமிதாப்பச்சன், சரத்குமார் ஏற்கனவே நடித்த படங்கள்.
தமிழ்சினிமாவுல காலம் காலமாக தமிழ்சினிமாவையே ரீமேக் பண்ணிய படங்கள் உண்டு. சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தை ஏற்கனவே பி.யு.சின்னப்பா முதலில் நடித்து இருந்தார். அதன்பிறகு அந்தப் படத்தின் பெயரில் நடிக்க எம்ஜிஆர், சிவாஜி இருவருக்கும் இடையே போட்டி நடந்தது. அதன்பிறகு எம்ஜிஆர் விட்டுக்கொடுத்ததால் தான் அந்தப் படத்தில் சிவாஜி நடிக்க முடிந்ததாம்.
இதன் தாக்கத்தால் இரட்டை வேடங்களில் நடித்த பல படங்கள் தயாராகி வந்தது. கொரியன் படங்களைக் காப்பி அடிப்பது நெல்சன், லோகேஷ் தான் என்றும் சொல்வார்கள். அப்படி காப்பி அடித்தால் நம் மண்ணின் வாசனை இருக்காது. இந்த கூலி படத்தோட டீசருக்குள் பல விஷயங்களை லோகேஷ் பண்ணியிருக்கிறார்.
அதில் தங்கத்திற்கு உள்ள கலர் மட்டும் தான் வருகிறது. மற்ற எல்லாம் பிளாக் அண்ட் ஒயிட்டில் வருகிறது. அதுமட்டும் அல்லாமல் ரஜினி விசில் அடிப்பதும் செண்பகமே செண்பகமே பாடலுக்குத் தான். தலைப்பு தான் காப்பி என்றால், விசில், வசனம் என எல்லாமே காப்பியாகத் தான் உள்ளது.
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள். தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு. மது உண்டு. பெண் உண்டு. சோறுண்டு. சுகமுண்டு. மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் எப்போதும் இடம் உண்டு என அந்த டயலாக் முடியும். இது ஏற்கனவே ரஜினி பேசிய பழைய டயலாக் என்கிறார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் ரஜினியின் வயது 30க்குள் இருக்கும். ஆனால் இப்போது அவருக்கு வயது 70ஐத் தாண்டியுள்ளது.
யாரென்ன சொன்னாலும் இன்பத்தைத் தள்ளாதே என்றும் அந்த டயலாக்கில் வரும். இந்த டயலாக் கண்ணதாசன் எழுதிய சம்போ சிவ சம்போ பாடலில் வரும் வரிகள். இது நினைத்தாலே இனிக்கும் படத்தில் வருகிறது. இந்தப் படத்தில் வரும் மொத்த பஞ்சும் இதுதான். டீசரில் லோகேஷ் எதுவும் புதுசாகப் பண்ணவில்லை. படத்தில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.