தளபதி 67 படத்தில் வில்லன் வேடம்...நடிக்க மறுத்த பிரபல நடிகர்...இதுதான் காரணமா?...

by Akhilan |   ( Updated:2022-12-02 17:28:00  )
தளபதி 67 படத்தில் வில்லன் வேடம்...நடிக்க மறுத்த பிரபல நடிகர்...இதுதான் காரணமா?...
X

Thalapathy67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் படத்தின் வில்லனுக்கான தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை ஒரு முக்கிய பிரபலம் வேண்டாம் எனக் கூறிய முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் 12ந் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர்.

தளபதி

Thalapathy67

விஜயின் அடுத்த படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் தான் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி விட்டது. அதற்கான முதற்கட்ட பணிகளில் தொடங்கி நடந்து வருகிறது. எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் உரிமையை வாங்கி தளபதி 67 படத்துக்கு திரைக்கதை எழுதி வருகிறார்.

இப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்க இருக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்த படத்தினை இணைந்து தயாரிப்பார்கள் என கிசுகிசுக்கள் வட்டமடித்து வருகின்றது. த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நரைன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

Karthick

இப்படத்தில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முன்னணி நடிகரை வில்லனாக போட லோகேஷ் முடிவெடுத்திருக்கிறார். சஞ்சய் தத், பிருத்விராஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. அடுத்த வில்லனாக ஏற்கனவே நிவின் பாலி, விஷாலிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதையும் படிங்க: “தளபதி 67 இந்த ஹாலிவுட் படத்தோட ரீமேக்தான்”… என்னப்பா சொல்றீங்க??

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க நவரச நாயகன் கார்த்திக்கிடம் லோகேஷ் கேட்டு இருக்கிறார். ஆனால் தற்போது இருக்கும் உடல்நிலையால் அந்த வாய்ப்பை கார்த்திக் மறுத்து விட்டாராம். விரைவில் வில்லன்களை முடிவெடுத்துவிட லோகேஷ் பரபரப்பாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story