விக்ரம் 100வது நாள் வெற்றிவிழா...! அதைவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கு...! லோகேஷின் அசால்ட்டான பதில்....

by Rohini |
loki_main_cine
X

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம். இந்த படம் வெளியாகி 100 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்திரி, மைனா, ஷிவானி, மகேஸ்வரி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

loki1_cine

படத்தின் முக்கிய புள்ளியாக இருந்தவர் இசையமைப்பாளர் அனிருத். இவரின் இசையில் படம் பார்த்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் கமலின் கெரியரில் இத்தகைய வெற்றியை இதுவரை நான் பார்த்ததில்லை என்று ஒரு மேடையில் கமலே தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்கள் : இவங்கதான் கோலிவுட்டின் கங்கனா….! சொன்னா ஏத்துபீங்களா…? நடந்த விஷயம் அப்படி…

loki2_cine

இந்த நிலையில் படத்தின் 100வது வெற்றிவிழா கொண்டாட்டத்தை அந்த ஊர்களில் விருப்பத்திற்கேற்ப திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இதே வகையில் கோயம்புத்தூரில் உள்ள திரையரங்கில் இன்று 100 வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாட இருக்கின்றனர்.

loki3_cine

ஒரு காஃபி ஷாப் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோகேஷிடம் இதை பற்றி கேட்டபோது இல்லை. அது ஏதோ திரையரங்கில் கொண்டாட இருக்கின்றனர். நான் போகவில்லை. எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு என்று அசால்ட்டாக பதில் சொல்லி கிளம்பினார்.

Next Story