Connect with us
Rajni, logesh

Cinema History

சுயமா சிந்திக்கவே தெரியாதா லோகேஷ்?… பங்கமாய் கலாய்த்த பயில்வான்… அட இப்படி எல்லாமா பேசுவாரு?

சமீபத்தில் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இணைந்த தலைவர் 171 படத்தோட டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. படத்திற்கு கூலி என்று பெயரிட்டுள்ளனர். இதில் லோகேஷை கழுவி கழுவி ஊற்றியுள்ளார் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்க நாதன். வாங்க என்னன்னு பார்ப்போம்.

இதையும் படிங்க… கமல் நடிப்பில் களைகட்டிய வெள்ளி விழா படங்கள்… கோவை சரளாவுடன் அசத்திய சதிலீலாவதி!..

ரஜினி லோகேஷ் இணையும் தலைவர் 171க்கு சமீபத்தில் டைட்டில் ப்ரோமோ வெளியிட்டார்கள். ரஜினி, கமல் இணைந்து நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். பாலசந்தர் இயக்கிய மாபெரும் சூப்பர்ஹிட் படம். அந்தப் படத்தில் ஜகமே தந்திரம் பாடல் வரிகளை எடுத்து இந்த தலைவர் 171ல் லோகேஷ் தூக்கி வைத்துள்ளார். இது ரஜினியின் பஞ்ச் டயலாக். அடுத்தவன் வாந்தி எடுத்துப் போட்டதை திங்கிறியா நீயி… என்று காட்டமாகப் பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்லாமல் பரீட்சையில காபி அடிச்சு பாஸ் ஆனாயா.. சுயமா சிந்திக்கவே தெரியாதா? எத்தனையோ கதாசிரியர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்கள்ல 10 பேரை வச்சி சுயமா எழுதேன். அதை விட்டுப்புட்டு கண்ணதாசனும் செத்துப் போயிட்டாரு. எம்எஸ்.விஸ்வநாதனும் செத்துப் போயிட்டாரு.

பாலசந்தரும் செத்துப் போயிட்டாரு. இந்த மூணு பேரும் உரிமை கொண்டாட மாட்டாங்க. கேஸ் போட மாட்டாங்க. அந்த தைரியத்துல அந்தப் பாட்டோட வரிகளை இந்;தப் பட முன்னோட்டத்துக்கு டயலாக்கைக் கொடுத்துருக்காரு லோகேஷ் கனகராஜ். முன்னோட்டமாவது உயிரோட்டமாக இருக்கும்னு பார்த்தா சாவடிச்சிட்டாரு.

ஆக்ஷன் படம்னாலே அருவா, துப்பாக்கி தானா? வேற சிந்தனையே கிடையாதா? அதனால தானய்யா படம் ஓட மாட்டேங்குது. ரஜினியோட ஆறிலிருந்து 60 வரை அருமையான படம். பழைய கதையானாலும் புதிய விஷயமா பஞ்சு அருணாசலம் சொல்லியிருப்பாரு. பாலசந்தர் நிறைய படங்கள்ல ரஜினியோட நடிப்பைக் கொண்டு வந்துருப்பாரு. மகேந்திரனின் ஜானி எவ்வளவு நல்ல படம்?!

இதையும் படிங்க… ‘விடாமுயற்சிக்கு’க்கு விட்டாச்சு லீவு..! இனி ‘தல’ய பிடிக்க முடியாது.. தல முழுக வேண்டியதுதான்

நல்ல நடிச்சிருக்காரு ரஜினி… இதை விட கொடுமை தங்க மோதிரம், தங்க வாட்ச்… தங்க செயினை எடுத்துக்கிட்டு சண்டை போடப் போறாராம்… யப்பா தங்கம் என்ன விலை விக்கிதுன்னு தெரியுமா? கண்ணால தான் பார்க்க முடியும். வாங்க முடியாது. காதுல வேணா பூ சுத்தலாம். உடம்பு பூராமா சுத்தறது..? சன் பிக்சர்ஸ் நிறைய செலவு பண்றாங்க.

நிறைய சம்பளம் கொடுக்குறாங்க. அதுல மூளையை கசக்கி தரமான படமா கொடுங்க… ரஜினியை நடிக்க வைங்க. எங்களை சந்தோஷப்படுத்துங்க. இதுதான் எங்களோட கோரிக்கை. இவ்வாறு பயில்வான் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top