லோகேஷிடம் இது இருக்கவே இருக்காது… விஜயே சொன்ன சூப்பர் தகவல்… அட்ரா சக்க!

தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே தற்போதைய டாக் ஆஃப் தி டவுனாகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்தாலஜி இயக்கி இருந்தாலும் அவருக்கு கைதி திரைப்படம் தான் கோலிவுட்டில் ஒரு அடையாளத்தினையே கொடுத்தது. ஆடம்பாரம் இல்லாத ஒரு சின்ன கதையில் தியேட்டரையே அலற விட்ட பெருமை லோகேஷை சேரும். இதனால் லோகேஷ் என்ற இயக்குனர் மீது பல நடிகர்களின் வெளிச்சம் வீசியது.
இதையும் படிங்க: ரஜினிக்கு குறுக்கே வந்த நடிகர்!. தலைவர் 170 டைட்டிலை கூட சொல்ல முடியலயே!. இது என்னடா சோதனை!…
அதை தொடர்ந்து தான் லோகேஷ் தன்னுடைய ஆஸ்தான நாயகனான கமலினை வைத்து விக்ரம் படத்தினை இயக்கினார். படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. கமலுக்கு பல வருடங்கள் கழித்து கிடைத்த மாஸ் ஹிட் படம். லோகேஷுக்கு சிகப்பு கம்பளமே விரிக்கும் அளவு முக்கிய இடம் கோலிவுட்டில் கிடைத்தது.
இதையும் படிங்க: மறுபடியும் ஏமாற்றிய அஜித்!.. விடாமுயற்சிக்கு விடிவு காலம் இல்லையாம்!.. காண்டான ரசிகர்கள்!..
இத்தனை வெற்றிக்கு பிறகு லோகேஷ் தற்போது விஜயை வைத்து லியோ படத்தினை இயக்கி வருகிறார். படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அர்ஜூனின் இண்ட்ரோ வீடியோ சமீபத்தில் வெளியாகி செம வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் லோகேஷிடம் கதை மட்டுமே இருக்குமாம். அதுவும் எந்த எழுத்து வடிவ பேப்பருமே இருக்காதாம். ஷூட்டிங்கில் ஷாட்டுக்கு டயலாக் கூட அவருக்கு அந்த நிமிடத்தில் தோணுவதை தான் சொல்லுவாராம். இதை மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜயே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.