என்னோட ரேஞ்ச் என்னானு நல்லாவே இப்ப தெரிஞ்சுருக்கும்...! நாசுக்காக விஜய்க்கு சவால் விடுற மாதிரி இருக்கே லோகேஷ்...
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒட்டு மொத்த திரையுலகமும் கொண்டாடுகிற இயக்குனராக மாறி கொண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ். இயக்கியது 4 படங்களாயினும் நான்கு ஜென்ம வெற்றியை கொடுத்த ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளவர் லோகேஷ்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள படமாகவே விளங்குகிறது. அந்த அளவிற்கு கதையை நேர்த்தியாக கொண்டு போவதில் இருந்து மக்களை எப்படியெல்லாம் ரசிக்க வைக்க முடியும் என்னும் நுணுக்கத்தை சிறுவயதிலயே கற்று கொண்டு சினிமாவிற்குள் வந்தார் போலும்.
இந்த நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 67 படத்தை லோகேஷ் தான் இயக்க போகிறார். இதற்கு முன் மாஸ்டர் படத்தை எடுத்து வெற்றி கண்ட லோகேஷ் மாஸ்டர் படத்தில் என்னுடைய இடத்தில் வேலை பார்த்த உணர்வு இல்லை என்றும் விக்ரம் படத்தில் என்னுடைய உலகம் போல இருந்தது எனவும் கூறினார்.
மாஸ்டர் படத்தில் விஜயுடன் வேலை பார்த்ததால் அவரை யார் என்று எனக்கு தெரியும் என்னை யாரென்று அவருக்கும் இப்பொழுது தெரிஞ்சிருக்கும். மக்களிடம் படத்தை எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு ஐடியாவும் இருக்கிறது. அதனால் விஜயின் அடுத்த படத்தில் 100 சதவீதம் வெற்றி இருக்கும் என கூறினார்.