நோகாம நடிச்சு 250 கோடியை சுருட்டிட்டு போகவா? ‘கூலி’ படத்தில் ரஜினிக்காக லோகேஷ் போட்ட ப்ளான்

Published on: June 22, 2024
loki
---Advertisement---

Actor Rajini: ரஜினிகாந்த் தன்னுடைய 171 வது படத்தில் இயக்குனர் லோகேஷ் உடன் இணைய இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த. ச. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி அடுத்ததாக இணையும் திரைப்படம் தான் கூலி திரைப்படம்.

கமலுக்கு ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த லோகேஷ் உடன் இணைந்து எப்படியாவது ஒரு படத்தில் நாமும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த ரஜினிக்கு அவருடைய 171 வது படம் அந்த ஆசையை நிறைவேற்றி இருக்கிறது. இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் கலந்த படமாக தான் அமைய இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்காக சில திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறாராம் லோகேஷ்.

இதையும் படிங்க: ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி… அப்படி என்னதான் நடந்தது?

73 வயதை கடந்த ரஜினியை லோகேஷ் அவர் பார்முக்குள் கொண்டு வருவது என்பது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும் ஆக்சன் படம் என்பதால் கண்டிப்பாக அது சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரஜினியை காட்ட வேண்டும். ஏற்கனவே வேட்டையன் திரைப்படத்தில் ஏகப்பட்ட ஊர்களில் படப்பிடிப்பை நடத்தியதால் அதிலேயே ரஜினி மிகவும் சோர்வடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது .

அதனால் இந்த படத்தில் ரஜினியை மிகவும் சிரமப்படுத்த வேண்டாம் என நினைத்திருக்கிறாராம் லோகேஷ். அதற்காக பல திட்டங்களை வகுத்திருக்கிறாராம் .அதில் ஒரு முக்கியமான திட்டம் என்னவென்றால் மொத்த படப்பிடிப்பே இரண்டு இடங்களில் தான் நடத்தப் போகிறார்கள். ஒன்று பிரசாத் ஸ்டூடியோவிலும் இன்னொன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவிலும் தான் நடத்தப் போகிறார்களாம் .

இதையும் படிங்க: ஒன்னு ரெண்டு இல்ல.. விஜயுடன் பல முறை சேர்ந்து டூயட் ஆடிய நடிகைகளின் லிஸ்ட்.. ஐயோ சிம்ரன் நீங்கதான் பெஸ்ட்

ரஜினியை தேவையில்லாமல் அலைக்கழிக்க வேண்டாம் என லோகேஷ் முடிவெடுத்திருப்பாராக தெரிகிறது. இதில் எப்படி அவரை ஆக்சன் காட்சிகளில் நடிக்க வைக்கலாம் என்ற கோணங்களில் லோகேஷ் சில பல யோசனைகளை வகுத்து அதற்கு ஏற்றவாறு படப்பிடிப்பை நடத்த இருக்கிறாராம். படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கும் நிலையில் ஜூன் மாதத்தில் ஏதோ ஒரு நல்ல நாள் இருப்பதால் அந்த ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு தொடர்ச்சியாக ஜூலை மாதத்தில் இருந்து வைத்துக் கொள்ளலாம் என படக் குழு தெரிவித்திருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் ஒரு சின்ன கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: இறந்தவருக்கு போன் போட்ட கமல்!.. உடல் நடுங்கி பதட்டமான உலக நாயகன்!.. இது அவர் லிஸ்ட்லயே இல்லயே!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.