எங்க போனாலும் ரவுண்ட் கட்டுரானுங்க! நல்ல வேளையா ரஜினி காப்பாத்துனாரு - பெருமூச்சு விடும் லோகி
Actor Rajini: தமிழ் சினிமாவில் இப்போது அனைவரும் ஒரு தேடப்படும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாக்களும் இவருக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்க காத்துக் கொண்டிருக்கின்றன. விக்ரம், கைதி போன்ற படங்கள் ஏற்படுத்திய தாக்கம் லோகேஷை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
அதுவும் ஒரு தனி யுனிவெர்சை உருவாக்கி தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டியிருக்கிறார். விக்ரம் படத்தில் அவர் உருவாக்கிய லோகி யுனிவெர்ஸ் அடுத்தடுத்த படங்களிலும் இருக்குமா என்று கேட்கும் அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார் லோகேஷ்.
இதையும் படிங்க :மாரிமுத்துவுக்கு பின்னாடி ஒரு வலியா? இதுவே வேறொருத்தியா இருந்தா போயானு போயிருப்பாங்க!
தற்போது விஜயை வைத்து லியோ படத்தை எடுத்து முடித்திருக்கும் லோகேஷ் லியோ படத்திலும் அவருடைய LCU வை பயன்படுத்தியிருக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எங்கு போனாலும் இதை பற்றியே கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு வந்த அமைந்தது ரஜினி 171 படம். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கப் போகும் அடுத்த படம் தான் இந்த ரஜினி 171. இந்தப் படத்திற்கும் இசை அனிருத்.
இதையும் படிங்க :அத கொஞ்சம் மூடு செல்லம்!.. சேலையை விலக்கி அழகா காட்டும் தர்ஷா குப்தா!.
சமீபத்தில் தான் இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதை பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும் போது ரஜினி 171 படத்தில் கண்டிப்பாக LCU இருக்காது எனவும் ஏன் ரஜினியே இதை விரும்பமாட்டார் என்றும் கூறினார்.
ஏனெனில் ரஜினி படம் ரஜினி படமாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புபவர் சூப்பர்ஸ்டார். அதனால் LCU என்ற பேச்சுக்கே இடம் இருக்காது எனவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் லோகேஷே எப்படா என்ன LCU வில் இருந்து காப்பாற்றுவீங்க என்று கூட நினைத்திருப்பார். ஏனெனில் அந்தளவுக்கு LCU வை பற்றி கேட்டு கேட்டு ரசிகர்கள் டார்ச்சர் செய்து விட்டதாகவும் ரஜினி படத்தில் இருக்காது என்பதால் லோகேஷிற்கு கொஞ்சம் மன நிம்மதியாக இருக்கும் எனவும் செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க : நோயில் தவிக்கும் சமந்தா… கல்யாண மாப்பிள்ளையாகும் நாக சைதன்யா… பிரபல நடிகை கில்லாடி தானுங்கோ!