Cinema News
10 படம் மட்டும் தான்… லோகேஷ் இந்த முடிவை எடுக்க இந்த பிரபலம் தான் காரணமா?!
Lokesh Kanagaraj: தமிழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சினிமாவில் மொத்தம் 10 படங்களை மட்டுமே இயக்குவேன் எனக் கூறி இருப்பதன் பின்னணியில் ஒரு முக்கிய பிரபலம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதை கேட்ட பலருக்குமே ஆச்சரியமாகி விட்டதாக கூறப்படுகிறது.
லியோ படத்தின் ரிலீஸ் ரொம்பவே நெருங்கி விட்டது. படத்தினை குறித்தும் தன்னுடைய சினிமா கேரியரை குறித்தும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார். அதில் பல சுவாரஸ்ய தகவல்களையும் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் பிரபல திரை விமர்சகர் பிஸ்மிக்கு பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவரிடம் ஏன் திடீரென 10 படத்துடன் விலகுவதாக சொல்லி இருக்கீங்க.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: ராதிகாவால் ரோட்டுக்கு வந்த கோபி… அதான் நெஞ்சு வலி ட்ராமாவோ?
அதில் மாற்றம் இருக்கலாம். ஆனால் ஏன் இந்த பெரிய முடிவு என பிஸ்மி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் பொதுவாகவே என்னுடைய இன்ஸ்பிரேஷனே அமெரிக்க டைரக்டர் குவெண்டின் டேரண்டினோ தான். அவரும் தன்னுடைய சினிமா கேரியரில் இருந்து 10 படத்துடன் விலகி விடுவேன் என அறிவித்து இருந்தார்.
அதே போல தான் நானும் நினைத்தேன். மேலும் ஒவ்வொரு தலைமுறைக்கு ஒரு இயக்குனரை பிடிக்கும். தொடர்ச்சியாக நாம் படம் எடுக்கும் போது ரசிகர்களுக்கு அது அலுப்பு தட்டி விடும். பிடிக்காமல் கூட போகலாம் அதனால் தான் 10 படத்துடன் ஓய்வெடுத்து விடுவேன் எனக் கூறி இருந்தேன் என்றார்.
இதையும் படிங்க: அவ்ளோ பாசத்தை வச்சேன்! இப்படி மோசம் பண்ணுவாருனு எதிர்பாக்கல – சிவகார்த்திகேயனால் விரக்தியடைந்த இமான்
மேலும் எனக்கு ஓவராக பிஸியாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த துறையில் இருந்து விலகி வேறு எதையும் எக்ஸ்ப்ளோர் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிவித்தார். ரஜினிகாந்த், பிரபாஸ், சூர்யா, கார்த்தியை வைத்து படம் அடுத்தடுத்த இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இதில் ரஜினிகாந்த் படமும், பிரபாஸ் படமும் தன்னுடைய சினிமா யூனிவர்ஸுக்குள் வராமல் தனிப்படமாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார். லியோ ரிலீஸை பொருத்து அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.