More
Categories: Cinema News latest news

ரஜினிக்கு டிமிக்கி கொடுத்த அந்த பக்கம் தெறித்து ஓடிய லோகேஷ்.! ஓ இதான் விஷயமா.?

தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் எனும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததற்கு பிறகு, அவரது மார்க்கெட் இன்னும் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது. அடுத்து எந்த சூப்பர் ஹீரோவை லோகேஷ் இயக்க உள்ளார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், ஓர் சூப்பர் தகவல் வெளியானது.

Advertising
Advertising

 

அதாவது, உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற தகவல் அப்போது வெளியானது. இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடினர். ஆனால், எனோ அந்த படம் நடக்காமல் போனது.

அதன் பிறகு வேறு ஒரு கதையை தயார் செய்து விக்ரம் எனும் பெயரில் கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து, ஒரு புதிய படத்தை இயக்கி முடித்து விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தையும் கமல்ஹாசனே தயாரித்தும் உள்ளார். இந்த திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படியுங்களேன் – ஹிந்திக்கு மட்டும் கூடுதல் கவனம்.! சூர்யாவின் இன்னோர் முகம் இதுதான்.!

இந்த படத்தை அடுத்து தளபதி விஜய்யை ஹீரோவாக வைத்து மீண்டும் லோகேஷ் இயக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தக் கதை பற்றி விசாரிக்கையில் இந்த கதை ஏற்கனவே ரஜினிக்கு லோகேஷ் கூறிய கதை இதுதானாம்.

ரஜினிக்கு கூறிய கதையை தற்போது விஜய்க்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்து அதனை விஜய் படமாக இயக்க உள்ளாராம் லோகேஷ். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க லோகேஷ் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Published by
Manikandan

Recent Posts