Connect with us

ஹிந்திக்கு மட்டும் கூடுதல் கவனம்.! சூர்யாவின் இன்னோர் முகம் இதுதான்.!

Cinema News

ஹிந்திக்கு மட்டும் கூடுதல் கவனம்.! சூர்யாவின் இன்னோர் முகம் இதுதான்.!

தொடர்ந்து சூர்யா படங்கள் எதிர்பார்த்தே வெற்றியை பெறாமல் இருந்த சமயத்தில், அவருக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்ட சமயத்தில் சரியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வெளியானது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட ஹிந்தியிலும்  டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இதில் தமிழ் பதிப்பில் சூரரைப்போற்று திரைப்படத்தில் எந்த ஒரு சண்டைக் காட்சியும் இருக்காது. இப்படம் ஒரு நிஜக் கதை என்பதால் சண்டைக்காட்சி எதுவும் அதற்கு தேவை இல்லை

ஆனால், இந்தியில் அப்படி இல்லை. அதற்காக இரண்டு சண்டைக்காட்சிகளை இயக்குநர் சுதா கொங்கரா வடிவமைத்து இருந்தாராம். ஹிந்தியில் சூரரைப்போற்று திரைப்படம் உதான் எனும் பெயரில் ரிலீசானது. இதில் சூரரை போற்று சூர்யாவின் இன்னோர் முகத்தை நீங்கள் பார்க்கலாம்.

இதையும் படியுங்களேன் – என்கிட்ட கேட்டார்., ஆனா அதை அவர் பண்ணிட்டார்.! அஜித்தின் இன்னொரு முகம்.! போட்டுடைத்த பிரபலம்.!

தற்போதுதான் திரைப்படம் டிவியில் ஒளிபரப்பானது. அப்போது அதில் நீக்கப்பட்ட சண்டைக்காட்சிகளை ஒரு புரோமாவாக வெளியிட்டு அப்படத்திற்கு டிவி விளம்பரம் செய்து வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் இந்திக்கு மட்டும் சண்டை காட்சிகள் இருக்கிறது. தமிழுக்கு ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், சூரரை போற்று  திரைப்படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டாலும், ஒரு முன்னணி ஹீரோவை வைத்து ஹிந்தியில் மீண்டும் அதனை மறு உருவாக்கம் செய்ய உள்ளாராம் சுதா கொங்காரா. அதற்கான வேலைகள் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top