More
Categories: Cinema News latest news

லோகேஷ் கனகராஜுக்கே செக் வைத்த ஹேக்கர்ஸ்… லியோ படத்தை வைத்து செய்த சதி..

Lokesh Kanagaraj: தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியான சம்பவத்தினை ஹேக்கர்ஸ் செய்து இருப்பதால் தற்போது அந்த சம்பவம் தான் கோலிவுட்டில் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. 

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரின் முதல் படமே ஹிட் கொடுக்க ரசிகர்களிடம் தன்னை ரிஜிஸ்டர் செய்து கொண்டார். அதை தொடர்ந்து அவரை நம்பி முதல் வாய்ப்பு கொடுத்தது கார்த்தி தான்.

இதையும் படிங்க: பண உதவி கேட்டுப்போன விகே ராமசாமி!.. என்.எஸ்.கே கொடுத்தது என்ன தெரியுமா?!..

கைதி படம் ரிலீஸாகி பலரையும் வாவ் சொல்ல வைத்தது. ஒரே நாள் இரவில் இத்தனை கதை சொல்ல முடியுமா என பலரும் படத்திற்கு செம அப்ளாஸ் தட்டினர். அந்த வகையில் படம் மிகப்பெரிய வசூலை படைத்தது. அதை தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தினை இயக்கினார்.

அந்த படமும் எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுத்தது. அதுவரை கேரியரில் ஆட்டம் கண்டு இருந்த கமல் மீண்டும் தன்னுடைய ஹிட் கணக்கை தொடங்கினார். விக்ரம் படம் கொரோனாவுக்கு பின்னர் வந்ததால் தியேட்டருக்கு ரசிகர்கள் வருவதற்கும் காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதானா? சூர்யாவுக்கு வச்ச ஆப்பு

தொடர்ந்து ஹிட் லிஸ்ட்டை சேர்த்து வந்த லோகேஷுக்கு லியோ கண்டிப்பாக பெரிய அடியாக அமைந்தது. லியோ படம் பலதரப்பிலும் மோசமான விமர்சனத்தினை பெற்ற நிலையில் பேட்டியில் தன்னுடைய கதைக்கே விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

600 கோடியை வசூல் செய்த லியோ திரைப்படம் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் ரிலீஸாகியது. இந்நிலையில் லோகேஷின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஹேக்கர்ஸ் செய்த அட்டூழியமாக மொத்த லியோ திரைப்படமும் ஓடி வந்தது. அதனை தொடர்ந்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து அவரின் ஃபேஸ்புக் பக்கத்தினை மீட்கும் பணி தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts