செம உஷாருதான் லோகேஷ்!… எப்படியெல்லாம் பிளான் போடுறாரு பாருங்க?!… கூலி பட அப்டேட்!…

Published on: November 19, 2024
lokesh
---Advertisement---

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தில் நடிகர்களை நடிக்க வைக்க சில விஷயங்களை செய்வதாக தகவல் வெளியாகிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகின்றார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அடுத்ததாக கைதி என்ற திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறினார். 3-வது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லோகேஷ் மாஸ்டர் திரைப்படத்தை பிளாக் பாஸ்டர் ஹிட்டாக கொடுத்தார். அதனை அடுத்து கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

இதையும் படிங்க: ஒரு வாய்ப்பும் இல்லன்னாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல!.. ஓவர் ஆட்டம் போடும் விஷால்!…

கடைசியாக நடிகர் விஜய் வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது.

அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் கூலி படம் தொடர்பாக சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

coolie
coolie

ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் படம் செட்டு போட்டு மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகின்றதாம். திருவல்லிக்கேணியில் இருப்பது போல கிட்டத்தட்ட 300, 400 ரூமுக்கு செட்டு போட்டு இப்படத்தை இயக்கி வருகிறார்கள். இதில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. நடிகர் ரஜினிகாந்துக்கும் கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் இடையில் நடக்கும் சண்டை காட்சிகளை மிகப்பெரிய அளவில் எடுத்து வருகிறாராம்.

மேலும் படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகுதான் படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதே தெரியவரும் போல.. லோகேஷ் கனகராஜ் யாரையாவது நடிக்க வைக்க வேண்டும் என்று திடீரென்று யோசித்தால் உடனே அவர்களுக்கு போன் செய்து இரண்டு மூன்று நாட்கள் வந்து நடித்துக் கொடுங்கள் என்று கேட்டு விடுகிறாராம். அப்படிதான் டாணாக்காரன் திரைப்பட  இயக்குனர் தமிழும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இந்த அமுல் பேபி நடிகரா?!… எப்படி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டீங்களே!…

இதுபோல பல நடிகர்களுக்கு எந்த மீடியேட்டர் இல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜே போன் செய்து அழைத்து விடுகிறார். அதற்கு காரணம் இயக்குனரே போன் செய்து அழைக்கும் போது எந்த நடிகர்களும் மறுப்பு சொல்ல முடியாது என்பதை யோசித்து இப்படி அவர் செய்து வருவதாகவும், மேனேஜர் வைத்து நடிகர்களை அழைக்கும் போது அவர்களிடம் மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதால் தானே களத்தில் இறங்கி விடுவதாக சினிமா விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.