இனிமே என் படமாதான் இருக்கும்!. சொன்னது நீதானா?... லியோவில் விஜய்க்காக சறுக்கிய லோகேஷ்!..

by சிவா |   ( Updated:2023-10-19 00:27:36  )
leo
X

Leo Review: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியில் கூட இப்படம் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியான நிலையில், தமிழகத்தில் 9 மணிக்கு வெளியாகியுள்ளது. அதிலும், தமிழகத்தின் பல ஊர்களில் சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.

படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்தாலும் ஸ்பாய்லர்ஸும் ஒருபக்கம் வந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக ஒரு இயக்குனர் பெரிய ஹீரோவை வைத்து படமெடுக்கும்போது அந்த ஹீரோயின் இமேஜுக்காகவும், அவரின் ரசிகர்களுக்காகவும் சில காம்ப்ரமைஸ்களை செய்வார்.

இதையும் படிங்க: யானைக்கும் அடி சறுக்கும்! அத மட்டும் எதிர்பார்க்காதீங்க – ‘லியோ’ பத்தி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க

அப்படி செய்யும் போது இயக்குனர் அங்கே காணாமல் போய்விடுவார். சில சமயம் இயக்குனர் அதை விரும்பவில்லை என்றாலும் ஹீரோவே ‘என் ஃபேன்ஸ் இதையெல்லாம் என்னிடம் எதிர்பார்ப்பார்கள். இதெல்லாம் படத்துல வச்சிடுங்க.. இதுலாம் வேண்டாம்.. இந்த சீனை இப்படி மாத்துங்க’ என கதையையே மாற்றிவிடுவார்.

விஜயிடம் கவுதம் மேனன் கதை சொல்ல போனபோது கதையை கேட்டுமுடித்துவிட்டு அவரின் கையில் சிவகாசி மற்றும் திருப்பாச்சி சிடியை கொடுத்து ‘உங்க கதையில இதுல வரமாதிரி சீன்லாம் வச்சிடுங்க’ என்று சொன்ன கதையெல்லாம் நடந்தது. ஆனால், லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனையே தனக்கு பிடித்தமாதிரி மட்டுமே நடிக்க வைத்தார். அவர் சொன்னதை மட்டுமே விக்ரமில் கமல் செய்தார். அதனால் அந்த படம் பேசப்பட்டது.

இதையும் படிங்க: லியோ எல்சியூ தான்!.. ஆக்‌ஷனில் மட்டுமில்லை ஆக்டிங்கிலும் அசுரத்தனத்தை காட்டிய விஜய்.. ட்விட்டர் விமர்சனம்!

ஒருமுறை ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘மாஸ்டர் படம் செய்யும்போது அது என்னுடை ஸ்டைலில் பாதியும், விஜய் ஸ்டைலில் பாதியுமாக எடுத்தேன். ஆனால்,இனிமேல் நான் இயக்கும் படங்கள் என்னுடைய படங்களாக மட்டுமே இருக்கும்’ என்று சொன்னார்.

ஆனால், லியோ படத்தின் இரண்டாம் பாதியில் நிறைய காட்சிகள் விஜய்க்காக லோகேஷ் சமரசம் செய்து கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான் முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை’ என சமூகவலைத்தளங்களில் படம் பார்த்த பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story