என்னோட அந்த படத்துக்கு லோகேஷ் வெறித்தனமான ரசிகன்!.. மிஷ்கின் பகிர்ந்த சீக்ரெட்..

Published on: September 26, 2023
myskin
---Advertisement---

வங்கியில் பணிபுரிந்து வந்த லோகேஷ் குறும்படங்களை இயக்க துவங்கினார். அதன்பின் மாநகரம் திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே ஒரு இரவில் நடக்கும் கதைக்கு சிறப்பாக திரைக்கதை அமைத்து அசத்தியிருந்தார். அதன்பின் மீண்டும் ஒரே இரவில் நடக்கும் கதையாக கைதியை எடுத்தார்.

கார்த்தி நடித்திருந்த இந்த படமும் ரசிகர்களை அசர வைத்தது. இந்த படத்தை பார்த்த விஜய் அவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் மாஸ்டர். விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: தளபதி தரிசனத்தை விட.. லியோ பிளாக் டிக்கெட் பிசினஸ் தான் முக்கியம்!.. விஜய் ரசிகர்களா இப்படி?..

அடுத்து அவர் இயக்கிய விக்ரம் படத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கமல்ஹாசனுக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதுவரை கமல் நடிப்பில் வெளியான எந்த படமும் அவ்வளவு வசூலை குவிக்கவில்லை. கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதன்பின்னர்தான் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படமும் லோகேஷின் முந்தையை படங்களை போல ஒரு கேங்ஸ்டர் படமாகவே உருவாகியுள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என பலரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்த ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டா சோலி முடிஞ்சது!.. ஓவர் ஆட்டம் போடும் சிவகார்த்திகேயன்..

இப்படத்திற்கான ரிலீஸ்க்கான வேலையில் லோகேஷ் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள மிஷ்கின் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நான் இயக்கிய அஞ்சாதே படத்திற்கு லோகேஷ் ஒரு வெறித்தனமான ரசிகன். கைதி படத்தில் நரேன் நடித்த போது அப்படத்தை பற்றி லோகேஷ் பேசிக்கொண்டே இருப்பாராம்.

நான் லியோ படத்தில் நடித்தபோதும் லோகேஷ் என்னிடம் அப்படம் பற்றி பேசுவான். லோகேஷ் ஒரு திறமையான இளைஞன். அவன் ஒரு நல்ல ரசிகன். தனது திறமையில் இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளான்’ என மிஷ்கின் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: பப்ளிசிட்டி தேடுவதில் தலைவரும், சிஷ்யனும் ஒன்னுதான்!.. மீண்டும் ரஜினியை சீண்டும் புளுசட்ட மாறன்….

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.