
Cinema News
விஜய் படம் வரப்போகுது… ரஜினி படம் தொடங்கப்போகுது… லோகேஷ் பாய் இப்போ இதெல்லாம் தேவையா?
Published on
By
Lokesh Kanagaraj: எங்கும் லோகி, எதிலும் லோகி என்பதை போல லோகேஷ் தான் தற்போதைய இணைய உலகின் ட்ரெண்டாகி இருக்கிறார். ஒரு பக்கம் விஜய், இன்னொரு பக்கம் ரஜினி என அவரின் அடுத்தடுத்த படங்கள் மீதான அறிவிப்பு அவரை கொண்டாட வைத்து இருக்கிறது.
மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்த லோகேஷ் கனகராஜ். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் கார்த்தி.
இதையும் படிங்க: நாம சும்மா இருந்தாலும் சுழி சும்மா இருக்காது! வேண்டாத வேலையால் ரஜினியிடம் வெறுப்பை சம்பாதிச்ச நடிகர்
ஒரு வெற்றிக்கு எதிர்பார்த்து கொண்டிருந்த அவருக்கு பெரிய பரிசாகவே அந்த படம் அமைந்தது. இப்படியும் படம் எடுக்கலாமா என யோசிக்க வைத்தது. அதை தொடர்ந்து அவர் இயக்கிய படம் விஜயை வைத்து மாஸ்டர். சிம்பிளான கதையாக அமைந்தாலும் விஜயை வேறு ரூபத்தில் காட்டியது.
அடுத்து அவரின் பிடித்த நடிகரான கமலை வைத்து விக்ரம் என்னும் மாபெரும் வெற்றியை கொடுத்தார். தற்போது லியோ படத்தில் பிஸியாக இயங்கி வருகிறார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தின் 171வது படத்தினை இயக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: குடும்பத்துடன் சேர பிக்பாஸ் வைத்து ப்ளான் போடும் வனிதா… ஏலேய் முடில விட்றங்கம்மா… கதறிய ரசிகர்கள்
இந்நிலையில், லியோ முடிந்த கையோடு லோகேஷ் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். என்னது என முழிக்கலாம். ஆனா அதுதான் உண்மை. இரட்டை மாஸ்டர்களான அன்பறிவு இயக்கத்தில் அந்த படம் உருவாக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், ரஜினி தா.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிப்பதற்குள் இந்த படத்தில் லோகேஷ் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம். 70 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸே தயாரிக்க இருக்கிறது. அதிசயமாக லோகேஷுடன் இணைந்து அனிருத்தும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ரஜினி வேகத்துக்கு இந்த வயதில் விஜய்யால் ஓட முடியுமா என தெரியவில்லை. ஆனால், இந்த வயதிலும் விஜய்யின் வேகத்துக்கு ரஜினிகாந்த் ஈடு...
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணையத்தை சூடாக்கும் புகைப்படங்களை...
Leo movie suspense: நாளுக்கு நாள் லியோ படத்தை பற்றிய பல செய்திகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு...
Thalapathy68: விஜயின் நடிப்பில் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. படத்திற்கான இசை வெளியீட்டு...
Surya: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சினிமாவையும் தாண்டி சமூக நலன் சார்ந்த பல...