தளபதி 67-க்கு பின் லோகேஷ் இயக்கும் 3 திரைப்படங்கள்.. எல்லாமே செம மாஸ்!...

by சிவா |   ( Updated:2022-12-13 13:03:19  )
lokesh
X

lokesh

மாநகரம் திரைப்படம் மூலம் கவனிக்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் யாரிடமும் உதவியாளராக பணிபுரிந்தது இல்லை. குறும்படங்களை இயக்கி பின் சினிமா இயக்குனராக மாறினார்.

அதன் பின் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் மெகா ஹிட் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாலிவுட் மற்றும் டோலிவுட் என எல்லா இடத்திலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

Lokesh

தற்போது விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். இது ஒரு பக்கா கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். இது விஜய்க்கு 67வது திரைப்படமாகும். இப்படம் விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படம் தொடர்பான பணியில் லோகேஷ் ஈடுபட்டு வருகிறார். விஜய் படத்திற்கு பின் லோகேஷ் என்ன படம் எடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

இந்நிலையில், லோகேஷ் விஜய் படத்திற்கு அடுத்து எடுக்கப்போகும் 3 திரைப்படங்கள் பற்றிய தகவலை அவரே கூறியுள்ளார். தளபதி 67 படத்திற்கு பின் ‘கைதி 2’ படத்தையும், அதன்பின் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தையும், அதற்கு பின் விக்ரம் படத்தில் சூர்யா கலக்கியிருந்த ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரதை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கவுள்ளாராம்.

லோகேஷ் கூறுவதை பார்க்கும்போது அடுத்தடுத்து ரசிகர்களுக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது என்று சொல்லலாம்!...

இதையும் படிங்க: கட்டழகு கண்ண பறிக்குது!…கொழுக் மொழுக் உடம்பை காட்டும் வலிமை பட நடிகை…

Next Story