More
Categories: Cinema News latest news

தனுஷ் பட டைட்டிலை விஜய் படத்திற்கு வைத்த லோகேஷ் கனகராஜ்… இப்படியெல்லாம் நடந்திருக்கா?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த தகவல்களை எல்லாம் ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றே.

Leo

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படத்திற்கு தனுஷ் பட டைட்டிலை வைத்தது குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

Advertising
Advertising

கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மாஸ்டர்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

Master

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், இத்திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது முதலில் “மாஸ்டர்” திரைப்படத்திற்கு “வாத்தி” என்றுதான் டைட்டில் வைத்திருந்தார்களாம். அதன் பின் அந்த பெயர் செட் ஆகாது என்று நினைத்த லோகேஷ் கனகராஜ், அதனை “மாஸ்டர்” என்று மாற்றியுள்ளார்.

Vaathi

கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் உருவான “வாத்தி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஒரு வேளை விஜய் படத்திற்கு “வாத்தி” என்று பெயர் வைத்திருந்தால் தனுஷ் படத்திற்கு “மாஸ்டர்” என்று பெயர் வைத்திருப்பார்களோ!

இதையும் படிங்க: இதுவரை யாரும் செய்யாததை செய்து கின்னஸ் சாதனை படைத்த ரஜினி பட நடிகர்… புதுசு புதுசா யோசிக்கிறாங்களே!

Published by
Arun Prasad

Recent Posts