Cinema News
விஜய் சேதுபதியை ஒதுக்கி தள்ளிய லோகேஷ்… “கடைசியில் என் கிட்டத்தான் நீ வந்தாகனும்”… கெத்து காட்டிய மக்கள் செல்வன்…
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளிவந்த திரைப்படம் “விக்ரம்”. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மேலும் பகத் பாசில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
“விக்ரம்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கமல்ஹாசனின் திரைப்பயணத்திலேயே மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார் கமல்ஹாசன். மேலும் அத்திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசாக அளித்தார். அதுமட்டுமல்லாது ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ஒரு ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.
“விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி சந்தனம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இக்கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு டெரரான வில்லனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், “விக்ரம்” திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியை விலக்கிய சம்பவத்தை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
“சந்தனம் என்ற கதாப்பாத்திரத்தை எழுதும்போது முதலில் என்னுடைய நினைவுக்கு வந்தது விஜய் சேதுபதிதான். அதே போல் முதன்முதலில் அவரைத்தான் வேண்டாம் என்றும் நினைத்தேன். இதற்கு முன் நான் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடித்திருந்தார். ஆதலால் விக்ரம் திரைப்படத்தில் அவரை தேர்வு செய்ய வேண்டாம் என நினைத்தேன்.
ஆனால் விஜய் சேதுபதி அந்த ரோலை மிகவும் விரும்பினார். ஆனால் நான் அவரை தவிர்த்து வந்தேன். எனினும் அந்த கதாப்பாத்திரத்தை விரிவாக எழுதியபிறகு ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதிதான் எனக்கு மீண்டும் நினைவில் வந்தார். அதனை என்னால் தடுக்க முடியவில்லை.
ஆதலால் ஒரு நாள் அவரிடம் சென்று இந்த கதாப்பாத்திரத்தில் நீங்களே நடியுங்கள் என்றேன். அதற்கு அவர் ‘அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில எங்கிட்டத்தான் வருவன்னு எனக்கு அப்போவே தெரியும்’ என கூறினார். மேலும் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்” என அப்பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.