Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்த முக்கிய படம் ஒன்று அவருக்கு பதிலாக தற்போதைய நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருந்து ஹிட்டடித்து வருகிறார். மாநகரம் படத்தில் தொடங்கிய லோகேஷின் வெற்றி பயணம் சமீபத்தில் லியோ திரைப்படம் வரை நீண்டு கொண்டே செல்கிறது. விக்ரம் மற்றும் விஜயை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தையும் இயக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: தனுஷூக்கு வில்லன் S.K. இவருக்கு வில்லன் யாரா இருக்கும்? பிரபலம் போடும் ரூட் இதுதான்..!
ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்ற மியூசிக் ஆல்பத்தில் லோகேஷ் நடிக்கவும் செய்திருந்தார். நடிப்பின் மீது அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததால் சிலரிடம் கதை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி அவர் புதுமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்க இருந்த ஒரு கதையில் நடிக்க இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஆனால் திடீரென ரஜினிகாந்த் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் இப்படத்தில் இருந்து விலகினார். தற்போது அப்படத்தில் ஹீரோவாக புதுமுக நடிகராக லவ் டுடே படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரேமலு படத்தின் நாயகி மமீதா பைஜூ இருப்பதாக தகவல்கள் தெரிகிறது.
இதையும் படிங்க: ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ ரஞ்சனியை நியாபகம் இருக்கிறதா? இப்ப என்ன செய்றார் பாருங்க
புஷ்பா மற்றும் குட் பேக் அக்லி படத்தை தயாரித்து வரும் பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கோலிவுட்டை தற்போது தெலுங்கு நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்சி செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.
பிரபல நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை குறிக்கோளாக வைத்து தமிழ் நிறுவனங்களை விட தெலுங்கு நிறுவனங்களுக்கே அதிக அளவில் ஒப்புதல் தருவதாகவும் கூறப்படும் நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸின் இரண்டாவது படம் குறித்த அறிவிப்புகள் கசிந்துள்ளது.
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…