லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் பலரையும் ஆச்சரியபடுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாஸ் மசாலா படங்களுக்கு இடையே, ஹாலிவுட் பாணியில் ஒரு சினிமாடிக் யூனிவர்ஸ் உருவாக்கி, ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். கோயம்புத்தூரில் ஒரு வங்கி ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், இன்று இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளார்.
2017-ல் வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சென்னை சிட்டியில் நடக்கும் ஹைப்பர் லிங்க் திரைக்கதை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எந்த ஒரு பெரிய நட்சத்திரமும் இல்லாமல், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இப்படம் லோகேஷின் திறமையை உலகுக்குக் காட்டியது. லோகேஷின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படம் கைதி. இரவில் நடக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையான இது, பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர், லியோ, கமல் நடித்த விக்ரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வந்த கூலி தோல்வியை தழுவியது. தொடர்ந்து இவ்ர் மீது அதிக வன்முறைகாட்சிகளை வைக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் திடீரென ஹீரோவாக களம் இறங்கினார். DC என்ற பெயரிடபட்டுள்ள இந்த படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக லோகேஷ் 35 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவிலேயே அறிமுக ஹீரோக்களில் அதிக சம்பளம் வாங்கிய முதல் நபர் என்ற சாதனையை லோகேஷ் பெற்றிருக்கிறார்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…