Cinema News
என்னோட கனவுப்படம் அது!. 10 வருஷமா எடுக்க முடியல!.. ஃபீலிங்ஸ் காட்டும் லோகேஷ் கனகராஜ்…
மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு முன்பு குறும்படங்களை இயக்கி கொண்டிருந்தார். மாநாகரம் திரைப்படம் பலருக்கும் பிடித்திருந்தது. ஒரு அனுபவமுள்ள, தேர்ந்த இயக்குனர் போல அப்படத்தை இயக்கியிருந்தார். அப்படத்திற்கு பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். இதுவும் ஒரு இரவில் நடக்கும் கதையாகவே இருந்தது. இந்த படத்தில் லோகேஷ் அமைத்திருந்த திரைக்கதை பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தது.
அதன்பின் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் வசூலை வாரி குவித்ததோடு, லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களையும் உருவாக்கியுள்ளது. அவர் இயக்கும் படங்களை ‘லோக்கி யுனிவர்ஸ்’ என ரசிகர்கள் சொல்ல துவங்கிவிட்டனர்.
இப்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்து தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதேபோல், ரஜினியை வைத்தும் ஒரு படம் இயக்கவிருக்கிறார். அதன்பின் கைதி 2, விக்ரம் 2 என தொடர்ந்து திரைப்படங்களை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், கோவையில் ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது ‘என்னுடைய கனவு திரைப்படம் இரும்புக்கை மாயாவி. அதுதான் நான் எழுதிய முதல் கதையும் கூட. 10 வருடங்களுக்கு முன்பு எழுதியது’ என லோகேஷ் கூறினார்.
இதையும் படிங்க: ஏம்பா நீதான் எம்.ஜி.ஆரா?!.. பணம் கொடுத்த பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த பாட்டி!..