விக்ரம் படத்துல இப்படி ஒரு செண்டிமெண்ட் நடந்துச்சா!. லோகேஷ் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!...

kamal
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். சுஜாதா கதையெழுத ராஜசேகர் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் அம்பிகா, லிஸி, டிம்பிள் கபாடியா, சத்தியராஜ் என பலரும் நடித்திருந்தனர். ஹாலிவுட் பாணியில் ஜேம்ஸ்பாண்ட் கதை போல இப்படத்திற்கு கதை அமைத்திருந்தார் சுஜாதா. இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்களும் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

vikram
35 வருடங்கள் கழித்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க கமல் நடித்து வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படமும் பல கோடி வசூலை அள்ளியது. கமலின் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக விக்ரம் சாதனை படைத்தது. இப்படம் மூலம் தன்னை மீண்டும் நிரூபித்து ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு டப் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

Vikram
இந்நிலையில், இப்படத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். விக்ரம் முதல் நாள் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. அங்கு வந்த கமல் சார் என்னை அழைத்து ‘இந்த இடத்தை நீ செலக்ட் பண்ணியா. இல்ல புரடெக்ஷன்ல ஏதும் சொன்னாங்களான்னு’ கேட்டார்.
இல்ல சார் நான்தான் இந்த இடத்த செலக்ட் பண்னேன் என அவரிடம் சொன்னேன். அப்போது அவர் ‘35 வருடங்களுக்கு முன்னாடி நான் நடித்த விக்ரம் படத்தின் முதல் காட்சியை இதே இடத்துல வச்சிதான் எடுத்தோம்’ என சொன்னார். இப்படி அமைந்தது அழகான செண்டிமெண்ட்டாக எனக்கு தோன்றியது' என லோகேஷ் கனகராஜ் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: அப்பாஸ் தவறவிட்ட 2 முக்கிய படங்கள்.. – அதுல மட்டும் நடிச்சிருந்தா அவர் லெவலே வேற!