அந்த படம் எடுத்ததுக்கு பதிலா நான் 4 படம் எடுத்திருப்பேன்.! லோகேஷ் கனகராஜ் காட்டம்.!

by Manikandan |
அந்த படம் எடுத்ததுக்கு பதிலா நான் 4 படம் எடுத்திருப்பேன்.! லோகேஷ் கனகராஜ் காட்டம்.!
X

தமிழ் சினிமாவில் தற்போது உச்சநட்சத்திரங்களால் தேடப்படும் முக்கிய இயக்குனர் என்றால் அதில் லோகேஷ் கனகராஜ் முக்கியமானவர். முதல் படம் சிறு நடிகர்களை வைத்து மாநகரம், அடுத்து முன்னணி நடிக்கரான கார்த்தியை வைத்து கைதி, அடுத்து உச்சநட்சத்திரம் விஜயை வைத்து மாஸ்டர் தற்போது உலகநாயகனை வைத்து விக்ரம் என அடுத்தடுத்த உயரங்களில் பறந்து செல்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இவர் அடுத்ததாக மீண்டும் விஜயை வைத்து புதிய படம் இயக்க போவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது தான் கமல்ஹாசனை வைத்து விக்ரம் பட ஷூட்டிங்கை முடித்தார். வரும் மார்ச் 14ஆம் தேதி இப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்களேன் - கொஞ்சம் கூட கூச்சப்படாமல் வெளிப்படையாய் பேசிய பாலா.! எனக்கே பாடம் எடுக்குறாங்க.!

இந்நிலையில் அண்மையில் ஒரு குறும்பட நிகழ்ச்சிக்கு வந்த லோகேஷிடம் விக்ரம் படம் பற்றி கேட்டுக்கொண்டிருந்தனர். அவர் பட ரிலீஸ் அறிவிக்கப்பட உள்ளது. இனி வரிசையாக அப்டேட் வரும் என கூறினார். இருந்தும் பத்திரிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் விக்ரம் படம் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த படம் எடுக்க போட்ட உழைப்பிற்கு இன்னும் 4 படம் எடுத்திருக்கலாம். அந்தளவுக்கு வேலை செய்துள்ளோம். படம் வந்த பின்னர் பாருங்கள் என கூறிவிட்டு விட்டால் போதுமென நழுவி சென்றுவிட்டார் இயக்குனர் லோகேஷ்.

Next Story