சூர்யா படத்தை இயக்காததற்கு இதுதான் காரணம்....! உண்மையை சொன்ன லோகேஷ்

by ராம் சுதன் |   ( Updated:2022-05-27 07:54:01  )
surya
X

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஏராளமான இளம் மற்றும் திறமையான இயக்குனர்கள் உருவாகி வருகிறார்கள். அந்த வகையில் மாநகரம் என்ற படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்கும் லோகேஷ் கனகராஜ்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

lokesh kanagaraj -surya

lokesh kanagaraj -surya

தற்போது இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தான் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தின் புரமோஷன் தான். அதற்கேற்றாற்போல் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பும் உள்ளது.

முன்னதாக லோகேஷ் மற்றும் சூர்யா கூட்டணியில் இரும்புகை மாயாவி என்ற படத்தின் அறிவிப்பு வெளியாகி ஆரம்பகட்ட பணிகள் நடந்த நிலையில் திடீரென படம் டிராப்பானது. இதுகுறித்து சமீபத்தில் விக்ரம் பட புரமோஷனுக்காக பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.

irumbu kai mayavi

அதற்கு பதிலளித்த லோகேஷ் கூறியதாவது, "இரும்புக்கை மாயாவி படத்திற்காக எட்டு மாதங்கள் பணி செய்தோம். ஆனால், ஒரு கட்டத்தில் இந்தப் படத்தை இயக்குவதற்கான தைரியம் எனக்கு இல்லை. இதை ஓப்பனாகவே தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம், என்னால் இந்த படத்தை இப்போது இயக்க முடியுமா? என்று தெரியவில்லை சில ஆண்டுகள் கழித்து இந்த படத்தை இயக்கலாம் என கூறி விட்டேன்.

நான் உண்மையில் சூர்யாவின் படத்தை இயக்காததற்கு முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம். வேறு எந்த காரணமும் இல்லை" என கூறியுள்ளார்.

Next Story