கைதி பட கிளைமேக்ஸ் சீனை அங்க இருந்துதான் சுட்டேன்!.. ஓப்பன ஒத்துகொண்ட லோகேஷ்!..

by சிவா |   ( Updated:2023-11-10 00:19:25  )
kaithi
X

Lokesh kanagaraj: மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அதிர வைத்தார். ஒரு இரவில் நடக்கும் கதைக்கு சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கைதி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.

இதுவும் ஒரே இரவில் நடக்கும் கதைதான். தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படி ஒரு கதையையும், திரைக்கதையையும் எப்போதும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு சிறப்பாக அப்படத்தை உருவாக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்திருந்தது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் படத்தை டிராப் செய்கிறாரா ரஜினிகாந்த்!.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தானா?..

அடுத்து விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். கொரோனா ஊரடக்குக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நேரத்தில் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்த திரைப்படம் இது. அதன்பின் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்த படமும் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

லோகேஷின் திரைவாழ்வில் விக்ரம் திரைப்படம் முக்கிய படமாக அமைந்தது. இந்த படம்தான் லோகேஷுக்கு ரசிகர்களை பெற்று தந்தது. அதோடு, எல்.சி.யூ என ரசிகர்கள் சொல்ல துவங்கியதும் இந்த படத்திலிருந்துதான். அடுத்து மீண்டும் விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: அண்ணா உட்ருண்ணா!.. லியோ ஃபிளாஷ்பேக்கே பொய்யாம்.. உருட்ட ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்!..

அதேநேரம், லோகேஷ் இயக்கும் படங்கள் அல்லது சில காட்சிகள் ஹாலிவுட் படத்திலிருந்து எடுக்கப்படுவதாக பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லியோ திரைப்படம் கூட ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என சொல்லப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த லோகேஷ் கைதி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் பற்றி பேசினார்.

arnold

கைதி திரைப்படம் துவங்குவதற்கு 6 மாதத்திற்கு முன்பு ஆயுத பூஜையன்று அர்னால்டு நடித்த கமேண்டோ படத்தில் அவர் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு நிற்கும் போட்டோவில் அவருக்கு தலையில் விபூதி எல்லாம் அடித்துவிட்டு ஒருவர் ஆயுதபூஜை சொல்லியிருந்தார். அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அந்த காட்சியை எடுக்கும்போது கார்த்திக் சாரிடம் ‘சார் இந்த படம் வந்த பின்னாடி இந்த போஸ்டரை வச்சிதான் எல்லோரும் ஆயுதபூஜை வாழ்த்து சொல்லனும்’ என்றேன்’ என லோகேஷ் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: லியோல செஞ்ச தப்ப இனி செய்யக் கூடாது! உஷாரா முரட்டு வில்லன தட்டித் தூக்கிய லோகேஷ் – மிரள வைக்கும் ரஜினி171

Next Story