அடேய் அப்பரசண்டிகளா!.. லோகேஷை கொலைவெறியாக்கும் உச்ச நட்சத்திரங்கள்… லியோ வைரல்!
Leo Lokesh: லியோ படத்தின் காட்சிகள் குறித்தும் கதை குறித்தும் செம சீக்ரெட்டாக லோகேஷ் கனகராஜ் பாதுகாத்து வந்த நிலையில், உச்ச நட்சத்திரங்கள் தொடர்ந்து ரகசியங்களை உளறி கொட்டி கடுப்பேத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். லலித் தயாரித்து இருக்கும் இப்படத்தில் விஜயுடன் ஏகப்பட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் வாசிங்க: போடுறா வெடிய!.. மீண்டும் கல்லா கட்ட ரெடியான சன் பிக்சர்ஸ்!.. தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு….
இப்படத்தில் ரொம்ப பெரிய கேப்புக்கு பின்னர் த்ரிஷாவுடன் இணைந்து இருக்கிறார் தளபதி. படத்தில் இருக்கும் இரண்டு பாட்டில் ஒன்று இருவருக்குமான காதல் பாடல் எனக் கூறப்படுகிறது. இப்பாடலை வரும் விநாயகர் சதுர்த்தியில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் மீது இருக்கும் அதீத எதிர்பார்ப்பால் படத்தினை குறித்த பல பேட்டிகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இயக்குனர் லோகேஷ் தன்னுடைய படக்குழுவிடம் எதை வேண்டாலும் சொல்லுங்க. ஆனா படத்தினை பற்றி சின்ன காட்சிக்கூட வெளியாக கூடாது என கறாராக சொல்லி இருந்தாராம்.
இதையும் வாசிங்க: ஷூட்டிங்கில் ரவிச்சந்திரன் செய்த அட்ராசிட்டி! பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்த ஜெயலலிதா
ஆனால் இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் என்னை அடிப்பது போல லோகேஷ் காட்சி வைத்து இருந்தார். ஆனால் விஜயிற்கு அதில் தயக்கம் இருந்தது. முடியாது எனக் கூறிவிட்டார். நான் தான் சமாதானம் செய்து நடிக்க வைத்தேன் எனப் பேசி இருந்தார்.
இதற்கே லோகேஷுக்கு புகை வராத குறை தான். ஒன்னு சொன்னாலே கதைய கண்டுபிடிச்சிடுவாங்க. இவர் இவ்வளவு பெரிய ஹிண்ட்டை கொடுத்து இருக்காரே என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். இதில் இண்டர்வெல் சண்டை காட்சி நிறைய விஎஃப்எக்ஸ் வைத்து எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms