திருப்தி அடையாத லோகேஷ்....!அதெல்லாம் சரியா பண்ணியிருந்தால் படம் நல்லா வந்துருக்கும்....!
ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் கமல் நடித்த ’விக்ரம்’ படத்தை எதிர்பார்த்து உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். படம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் லோகேஷ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது கொஞ்சம் அதிர்ச்சியை உண்டாக்கியது.
மாநகரம், மாஸ்டர், கைதி போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த லோகேஷ் இன்று ஒட்டு மொத்த சினிமாவும் கொண்டாடுகிற இயக்குனராக வளர்ச்சி பெற்றுள்ளார். இவர் இயக்கிய 3 படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது.ஆனால் லோகேஷ் சில விஷயங்களை நான் பண்ணியிருந்தால் அந்த படங்கள் எல்லாம் இன்னும் வெற்றி பெற்றிருக்கும் என கூறுகிறார்.
மாநகரம் படத்தில் நான் துணை இயக்குனராக பணியாற்றியிருந்தால் அந்த படம் இன்னும் பேசப்பட்டு இருக்கும். கைதி படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம், மேலும் மாஸ்டர் படத்தில் இரண்டாவது பாதி கொஞ்சம் லேக் ஆனது. ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்தியிருந்தால் அதையும் நான் ஈடு செய்திருப்பேன் என்று கூறினார்.
இப்படியே கூறி வரும் லோகேஷ் விக்ரம் படத்திற்கு எதாவது சொல்லுவார் என எதிர்பார்த்த நிலையில் இன்னும் 10 வருடங்கள் கழித்து திரும்பி பார்த்தால் இதே மாதிரியான சில விஷயங்கள் விக்ரம் படத்திலும் தென்படும்.இப்பொழுது எதையும் சொல்ல முடியாது என கூறினார். நமக்கு வளர்ச்சி வளர வளர இந்த மாதிரியான எண்ணங்கள் வருவது சகஜம் தான் என்று கூறினார்.