சூப்பர் ஸ்டாருக்கு நீ படம் பண்ணக்கூடாது !- லோகேஷ் வெர்சஸ் கார்த்திக் சுப்புராஜ் சண்டை
தமிழில் ஃபேன் பாய் சினிமாக்கள் என்னும் புது விஷயத்தை துவக்கி வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். அதாவது தனது தலைவனை வைத்து ரசிகனே படம் எடுக்கும் முறைதான் இந்த ஃபேன் பாய் சினிமாவாகும்.
கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயங்கரமான விசிறி ஆவார். எனவேதான் அவர் ரஜினியை வைத்து பேட்ட எடுத்தபோது அதில் அதிகமாக ரஜினி திரைப்படங்களின் ரெஃபரன்ஸை வைத்திருந்தார்.
அதே போல லோகேஷ் கனகராஜ் உலகநாயகனின் மிகப்பெரும் ரசிகர் ஆவார். அவருக்கும் கமலை வைத்து விக்ரம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்சமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரவிருக்கும் 777 சார்லி என்கிற திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது அவர் கூறும்போது “முதலில் லோகேஷ் கனகராஜ்க்கு சூப்பர் ஸ்டாரை வைத்து திரைப்படம் இயக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. அப்போது நீ ஆண்டவர் ரசிகர் என்பதால் ஆண்டவரை வச்சி படம் எடுத்துக்கோ. நான்தான் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்குவேன்.” என கார்த்திக் சுப்புராஜ், லோகேஷிடம் கூறினாராம்.