ரஜினி பேரே மாஸா இருக்கே!.. வெளியான கூலி புது போஸ்டர்!.. அந்த நம்பர் என்ன குறியீடா?!..
Coolie rajini: ஜெயிலர் படத்தின் மெகா வெற்றி ரஜினியை மீண்டும் ஒரு பிஸியான நடிகராக மாற்றியிருக்கிறது. வேட்டையன், கூலி என படங்களின் அறிவிப்பு வெளியானது. வேட்டையனை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ரஜினி நடிக்கும் காட்சிகள் முடிந்துவிட்டது.
அந்த படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க போய்விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என பல ஊர்களிலும் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ஏன்? ஆமால சரியான காரணமா இருக்குல!..
ஏனெனில், லோகேஷின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் இயக்கத்தில் வெளியான லியோ படத்திற்கு இருந்தது போல வேறு எந்த தமிழ் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. இப்போது ரஜினியுடன் கூட்டணி அமைத்திருப்பதால் எதிர்பார்ப்பு வேறலெவலில் இருக்கிறது.
கூலி படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவே மிகவும் அசத்தலாக இருந்தது. வழக்கம்போல கூலி படமும் ஒரு பக்கா ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஜசேகர் என்கிற வேடத்தில் சத்தியராஜும், ப்ரீத்தி என்கிற வேடத்தில் ஸ்ருதிஹாசனும், கலீஷா என்கிற வேடத்தில் கன்னட நடிகர் உபேந்திராவும் நடித்து வருகிறார்கள்.
ஏற்கனவே இது தொடர்பான அசத்தலான போஸ்டர்களை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ரஜினியின் புது போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தில் ரஜினி ‘தேவா’ என்கிற வேடத்தில் நடிப்பதாக சொல்லியிருக்கிறார் லோகேஷ். தளபதி படத்தில் மம்முட்டி ஏற்ற வேடத்தின் பெயரும் தேவாதான். லோகேஷ் அதை வைத்துதான் ரஜினிக்கு இப்படி பெயர் வைத்தாரா தெரியவில்லை.
மேலும், ரஜினியின் கூலி நம்பர் 1421 என போஸ்டரில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன குறியீடு என்பது தெரியவில்லை. விரைவில் இது பற்றிய தகவலை லோகேஷே சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லியோவில் கமல்.. ‘கோட்’ல அஜித்தா? என்னப்பா சொல்றீங்க? உண்மையா?