Kaithi 2: வைரலான டில்லி மகள் புகைப்படம்! ஷாக்கான லோகேஷ்.. கைதி 2க்கு வந்த சிக்கல்

நேற்றிலிருந்து இயக்குனர் லோகேஷின் பேட்டி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் கூலி. அந்த படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தந்தது. அந்த படத்திற்கு பிறகு அவர் கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என்றிருந்த நிலையில் திடீரென அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

இந்தப் படத்தை முடித்த பிறகு தான் அவர் கைதி 2 திரைப்படத்தை கையில் எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு இடையில் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. அது வெளியானதில் இருந்து கைதி 2 திரைப்படத்தை டீலில் விட்டு விட்டார் லோகேஷ் என்று செய்திகள் வரத் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று சென்னையில் திடீரென பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி பல கேள்விகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

கூலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு வந்திருக்கிறது. ஆனால் இவர் முழுக்க முழுக்க ஆக்சன் படங்களையே இயக்கியதால் கமல் ரஜினி இணைந்து நடிக்கும் படம் லைட் வெயிட் சப்ஜெக்டாக இருக்க வேண்டும் என்பதால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக கூறினார். ரஜினி கமல் படத்தில் இவர் கமிட் ஆனதால் கைதி 2க்கு கொடுத்த கால்ஷீட்டை கார்த்தி வேறொரு இயக்குனருக்கு கொடுத்து விட்டார்.

அதனால் இப்போது லோகேஷ் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். கைதி 2 திரைப்படத்தை பற்றி அவர் கூறும் பொழுது ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது கைதி 2வை பொறுத்த வரைக்கும் அது டில்லிக்கும் அவருடைய மகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு கதை. சமீபத்தில் டில்லியின் மகள் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்தேன்.

மிகவும் வளர்ந்த பெண்ணாக மாறி இருக்கிறார். அதனால் ஸ்கிரிப்டில் கொஞ்சம் மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. எப்படியும் டில்லியின் மகள் திருமணத்திற்குள்ளாகவே திரைப்படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என சிரித்துக் கொண்டே கூறியுள்ளார் லோகேஷ்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago